21 ஏப்., 2010

கிறிஸ்தவ பாதிரிகளின் பாலியல் சேட்டைகள்: லத்தீன் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் கூடுதல் தகவல்கள்

ஸாவாபோலா:12 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் தொந்தரவுச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பிரேசிலில் 83 வயது பாதிரியார் ஒருவரை கைது செய்ததன் மூலம் லத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரிகளின் பாலியல் பலாத்காரம் தொடர்பான மேலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மோன்ஸித்தர் லூயிஸ் மார்க்கோஸ் பார்போஸாயிக்கும் மேலும் இரண்டு பாதிரியார்களுக்கும் எதிராக வெளிவந்த பாலியல் சேட்டைத் தொடர்பான ஆதாரப்பூர்வமான செய்திகள் பிரேசிலில் சூறாவளியை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கத்தோலிக்க பாதிரிகளின் பாலியல் சேட்டைகளைக் குறித்த செய்திகள் பரவிவரும் சூழலில் லத்தீன் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல என்பது பிரேசிலிலிருந்து வெளிவரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

பார்போஸாவுக்கும் 19 வயதுடைய இளைஞருக்கும் இடையேயான படுக்கையறைக் காட்சிகளை எஸ்.பி.டி தொலைக்காட்சி கடந்த மாதம் ஒளிப்பரப்பியதைத் தொடர்ந்து பாதிரிகள் குறித்த சர்ச்சைகள் பிரேசிலில் துவக்கம் குறித்தன. இச்செய்தி இணையதளத்தில் பரவலாக வெளியானது.

2009 ஜனவரியில் பதிவுச்செய்த வீடியோதான் அது என எஸ்.பி.டி தொலைக்காட்சி தெரிவித்தது. பார்போஸாவுடன் படுக்கையறையை பகிர்ந்துக்கொண்ட 19 வயது இளைஞன் அவருடன் 4 ஆண்டுகள் சர்ச்சில் பணியாற்றியுள்ளான். புலன் விசாரணை நடத்தியதில் பார்போஸா ஏராளமான சிறுவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வழக்கு தற்பொழுது நீதிமன்றத்தில் உள்ளது. இருபதிற்குமேற்பட்ட சாட்சிகளி விசாரணைச்செய்ததில் பார்போஸாவும் இதர இரண்டு பாதிரிகளும் பணமும், ஆடைகளும் இதர அன்பளிப்புகளும் வாக்களித்து 12 வயது சிறுவர்களைக்கூட பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தியதாக கண்டறியப்பட்டது.

மூன்று பாதிரிகளையும் வெளியேற்றிய கிறிஸ்தவ சபை விசாரணையை துவக்கியுள்ளது. பார்போஸாவும் இதர இரண்டு பாதிரிகளும் எங்கு வேலைப்பார்த்தனர் என்பதுக் குறித்து தகவலை கிறிஸ்தவ சபை வெளியிடவில்லை.

லத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எதிராக சமீபத்தில் ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த மாதம் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஒரு பாதிரியார் தப்பி ஓடினார். பொலிவியாவில் இவர் மூன்று சிறுவர்களை பாலியல் வன்புணர்வுச் செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி புகார் கூறியிருந்தார்.சிலி நாட்டில் வயதுக்கு வராத எட்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாக பாதிரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஒரு சிறுமி கர்ப்பிணியானார்.

ஒரு ஆர்தோடக்ஸ் கத்தோலிக்க சபையின் ஸ்தாபகரான பாதிரியார் தனக்கு அவர் மூலம் பெற்ற இரண்டு சிறுவர்களில் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியதாக மெக்சிக்கோவைச் சார்ந்த பெண்மணி கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.

பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றச்சாட்டுகளின் காரணமாக பல பாதிரியார்களையும் ட்ரான்ஸ்ஃபர் அல்லது வேறு நாடுகளுக்கு அனுப்பிய 30க்கும் மேற்பட்ட சம்பவங்களை கண்டறிந்ததாக அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பலரும் இதர நாடுகளிலும் தங்கள் பாலியல் சேவையை தொடர்கிறார்கள்.

பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த சூழலில்தான் போப்பின் அடுத்த இடத்திலிருக்கும் கர்தினால் டார்சிசியோ பெர்டோனின் அறிக்கை சர்ச்சையை கிளப்பியது. பாதிரிகளின் பாலியல் சேட்டைகளுக்கு காரணம் திருமணம் முடிக்காத துறவறம் காரணமல்ல எனவும் ஓரினச்சேர்க்கை மீதான ஈடுபாடுதான் என்றும் அவர் கூறியதற்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற இயற்கைக்குமாறான உறவை மேற்க்கொள்ளும் மாபாதகச் செயலை புரிவோரின் கூட்டமைப்பு தமது எதிர்ப்பை தெரிவித்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கிறிஸ்தவ பாதிரிகளின் பாலியல் சேட்டைகள்: லத்தீன் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் கூடுதல் தகவல்கள்"

கருத்துரையிடுக