பெங்களூர்:பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த இரட்டைக் குண்டுவெடிப்புகள் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏ தனது விசாரணையை துவக்கியுள்ளது.
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட என்.ஐ.ஏ குழு நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டது. வெடிப்பொருட்கள் கண்டெடுத்த இடங்களையும் குழு ஆய்வுச்செய்தது. வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரியுடன் என்.ஐ.ஏ குழு விவாதித்தது.
குண்டுவெடிப்பில் தீவிரவாதிகளின் தொடர்புக் குறித்து சந்தேகிப்பதாக போலீஸ் என்.ஐ.ஏவிடம் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த சூழலில் புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பை விசாரிக்கும் போலீஸ் குழுவும் பெங்களூர் வந்துள்ளது. பெங்களூர் போலீசாரிடம் இவர்கள் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துவங்குவதற்கு முன்பு நடந்த இரட்டைக்குண்டு வெடிப்புகளில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வெடிக்காத சில குண்டுகளும் போலீஸ் கைப்பற்றியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பெங்களூர் குண்டுவெடிப்பு:என்.ஐ.ஏ புலனாய்வைத் துவக்கியது"
கருத்துரையிடுக