வடமேற்க்கு டெல்லியில் உள்ள ரோஹினி என்ற இடத்தில் ஸ்வர்ண ஜெயந்தி பூங்காவில் 12000 திற்க்கும் மேற்ப்பட்ட ஏகல் வித்யாலாவின் உறுப்பினர்களான காட்டில் வசிக்கும் மக்களும் மலையில் வாழும் மக்களும் குழுமியிருந்தனர். இந்த மூன்று நாள் மாநாட்டில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் வனவாசிகள் கலந்து கொண்டனர்.
24 ஏக்கரில் 8 நகர மாதிரிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் இடமும், பெரும் கண்காட்சி நடத்தும் இடமும், வரவேற்பு நிலையமும், மருத்துவ வசதிகளும், மற்றும் அலுவலகங்களும் பூங்காவில் மற்ற 20 ஏக்கரை ஆக்ரமித்திருந்தது.
இந்தியாவின் ரிமோட் பகுதிகளுக்கு கல்வி பணிகளை எடுத்துச் செல்லும் சேவகர்களின் பணிகளை சர் சங்க் சாலக் மோகன் பகவத் பாராட்டிப் பேசினார்.மேலும்,"இந்த கல்விதான் இந்தியாவை தலைசிறந்த நாடாக மாற்றி வருகிறது. எதார்தத்தில் ஏகல் வித்யாலயாக்கள் மூலமாக வெறும் பள்ளிக்கூடங்களை நடத்தவில்லை மாறாக நமது கனவு இந்தியாவை உருவாக்க முயற்ச்சி செய்து வருகிறோம்."என்று உரையாற்றினார்.
கூடியிருந்த மக்களுக்கு பாபா ராம்தேவ் உரையாற்றும் பொழுது, "இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பிரதம திட்டம் இந்த ஏகல் இயக்கம் தான். மனித உடல் கோயில் போன்றதாகும். அதில் கடவுளுக்கு சேவை செய்வதே இந்த ஏகல் வித்யாலயா" என்று பகர்ந்தார்.
வி.ஹெச்.பி.யின் தலைவர் அசோக் சிங்கால் பேசுகையில்,"சுதந்திரத்தின் செளகரியங்கள் ஏதும் இக்கிராமங்களுக்கு சென்றடையவில்லை." என்று வருந்தினார்,(!)
1988 ஆம் ஆண்டு ஜார்க்ண்டில் தொடங்கப்பட்ட ஏகல் வித்யாலயா இயக்கம் இன்று 22 மாநிலங்களில் 27110 கிராமங்களில் பரவியுள்ளது. இந்த ஏகல் பள்ளிகளில் 7,78,965 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தியாவை 'சீக்க்ஷித், ஸ்வஸ்த், மற்றும் சம்ரித்' (அறிவுமிக்க, ஆரோக்கியமான, ம்ற்றும் வளமான) இந்தியாவாக உரூவாக்குவதே தமது குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர்.
சாத்வி ரிதம்பாரா இறுதி உரை நிகழ்த்தஒரு இலட்சம் கிராம்ங்களை சென்றடைய வேண்டும் என்ற முடிவோடு கூட்டம் கலைந்தது.
source:தி மில்லி கெஜட் (1-15 ஏப்ரல் 2010)
0 கருத்துகள்: on "ஒரு இலட்சம் கிராமங்களை சென்றடைய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். முடிவு"
கருத்துரையிடுக