6 ஏப்., 2010

பெஷாவரில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: 7 பேர் மரணம்

இஸ்லாமாபாத்:வட மேற்கு பாக்.நகரமான பெஷாவரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழுபேர் மரணமடைந்தனர்.

கடும் பாதுகாப்பு நிறைந்த தூதரகத்திற்கு 20 மீட்டர் தொலைவில் நடந்த குண்டுவெடிப்புகளில் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். 3 போராளிகளும் மரணமடைந்தனர்.

தூதரகத்தின் மீது தாக்குதல் நடந்ததை அமெரிக்க அதிகாரி ஒப்புக்கொண்டார். ஆனால் ஏற்பட்ட நாசங்களைக் குறித்து எந்தவிபரமும் வெளியிடப்படவில்லை. வெடிப்பொருட்களுடன் வந்த கார் தூதரக கேட்டில் இடித்து வெடித்துச் சிதறியதாக நேரில் கண்ட சாட்சிகளை மேற்க்கோள்காட்டி செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

தொடர்ந்து 4 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது. தூதரகத்தின் அருகிலுள்ள ராணுவ செக்பாயிண்டை நோக்கி போராளிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. ராணுவ முகாமும், உளவுத்துறை பிரிவு அலுவலகங்களும் அமைந்திருக்கும் காமா சதுக்கத்தில்தான் தாக்குதல் நடைபெற்றது. குண்டுவெடிப்பின் அதிர்வில் வாகனங்களும் கட்டிடங்களும் தகர்ந்தன.

அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாக்.தாலிபான் பொறுப்பேற்றுக் கொண்டது. அமெரிக்கா தங்களது எதிரி என்றும், அமெரிக்க தூதரகம் தான் தங்களது தாக்குதலுக்கான இலக்கு என்றும், பாகிஸ்தான் தாலிபான் செய்தித் தொடர்பாளர் அஸம் தாரிக் தெரிவித்தார். இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

வேறொரு நகரான திமர்கரயில் ஆளும்கட்சியான அவாமி நேசனல் பார்டியின் பேரணியின்போது நடந்த தாக்குதலில் 43 பேர் மரணமடைந்தனர்.

வட மேற்கு எல்லை மாகாணத்தின் பெயரை கைபர்-பஸ்தூன்கவ என்று மாற்றியதற்காக நடந்த கொண்டாட்டத்தின் போதுதான் இத்தாக்குதல் நடைபெற்றது. குண்டுவெடிப்பில் நூறுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட மேற்கு எல்லையில் தங்களுடைய முகாம்களின் மீது அமெரிக்கா நடத்திவரும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடிக் கொடுப்போம் என பாகிஸ்தான் தாலிபான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையா நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பெஷாவரில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: 7 பேர் மரணம்"

கருத்துரையிடுக