6 ஏப்., 2010

ஆப்கான் சிவிலியன் படுகொலை:நேட்டோ குற்றத்தை ஒப்புக்கொண்டது

காபூல்:ஆப்கானிஸ்தானில் பக்தியா மாகாணத்தில் பெண் உட்பட ஐந்து ஆப்கானிகளை கொன்ற நிகழ்வில் நேட்டோ படை குற்றத்தை ஒப்புக்கொண்டது.

பிப்ரவரி 12ஆம் தேதி கர்தஸ் மாவட்டத்தில் இரவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நேட்டோ படையினர் மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

தாலிபான் போராளிகள் வீட்டில் முகாமிட்டுள்ளனர் என்ற தகவலின் அடிப்படையில்தான் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும், அவர்கள் ஆயுதமேந்தியிருந்தார்கள் என்றும் நேட்டோ படையினர் கூறியது பொய் என விசாரணையில் தெரியவந்தது.

குடும்பத்தை பாதுகாக்க ஆண்கள் வழக்கமான எதிர்ப்பை மட்டுமே தெரிவித்தனர் என்பது விசாரணையில் தெளிவானதும் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக நேட்டோ ஆக்கிரமிப்புப்படையின் செய்தித் தொடர்பாளர் எரிக் ட்ரம்பெல்லா தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராணுவத்தினர் என்றும் அவர்கள் இறந்தவர்களின் உடலிலிருந்து குண்டுகளை அகற்ற முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

காயங்களில் ஆல்கஹாலை தேய்த்து ஃபாரன்சிக் சோதனையின்போது ஆதாரங்களை அழிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். சுவரில் பதிந்திருந்த துப்பாக்கிக்குண்டுகள் முக்கியமான ஆதாரமாக மாறியது.

இதற்கிடையே ஆறு ஆப்கான் படையினரைக் கொன்ற குற்றத்தை ஜெர்மன் படையினர் ஒப்புக்கொண்டனர். தவறாக நடந்த சம்பவம் என ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கார்ல் தியோடர் சூ குட்டன்பர்க் விவரித்துள்ளார். இக்கொலைகளுக்காக வருந்துவதாகவும் குடும்பத்தினருக்கு இதனை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கான் சிவிலியன் படுகொலை:நேட்டோ குற்றத்தை ஒப்புக்கொண்டது"

கருத்துரையிடுக