ஆலப்புழா:பல ஆயிரம் கோடி வர்த்தகத்துக்காக இந்தியர்களின் கிரிக்கெட் மோகத்தை ஐபிஎல்காரர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.கேரள முன்னாள் முதல்வர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆலப்பூழாவில் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி உட்பட பல்வேறு மார்க்சிஸ்ட் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
'இஎம்எஸும் மீடியாவும்' என்ற கருத்தரங்கை துவக்கி வைத்து சீதாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் ஐபிஎல் கிரிக்கெட் பற்றி குறிப்பிடுகையில், 'தற்போது பரபரப்பாக மீடியாக்களில் காட்டப்படும் ஐபிஎல் கிரிக்கெட், உண்மையில் விளையாட்டு சார்ந்தது அல்ல. இந்தியர்களின் கிரிக்கெட் மோகத்தை ஐபிஎல்காரர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பல ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் ஒரு வகையான தொழிலுக்கு கிரிக்கெட்டை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஐபிஎல்லுக்கு இவ்வளவு பெரிய பணம் எங்கிருந்தெல்லாம் வருகின்றன என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். ஐபிஎல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வரும் மீடியாக்களுக்கு, இந்த பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து தெரிவிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.
இதே நாட்டில் சக மனிதன் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதும், விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சாதாரண மக்கள் அல்லல் படுவதையும் காண்கிறோம். ஆனால் மற்றொரு பக்கம் தண்ணீராக இப்படி பணத்தை கொட்டப்படுவதையும் பார்க்க நேரிடுகிறது' என்றார்.
source:thatstamil

0 கருத்துகள்: on "இந்தியர்களின் கிரிக்கெட் மோகத்தை தவறாக பயன்படுத்தும் ஐபிஎல்: சீதாராம் யெச்சூரி"
கருத்துரையிடுக