சர்ச்சைகளில் சிக்கி வந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பிரதமர் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து பின் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்த சசி தரூர், கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.
பதவி ஏற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த அமைச்சர் ஐ.பி.எல். கொச்சி அணி உருவாக்கப்பட்ட பின் சர்ச்சை அதிகரித்தது. கொச்சி அணியை விலைக்கு வாங்கிய ரென்டெஜ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு என்ற நிறுவனம் சசி தரூரின் பெண் நண்பர் சுனந்தா புஷ்காருக்கு இலவச பங்குகளை அளித்துள்ளதாக ஐபிஎல் தலைவர் லலித் மோடி ஊடகங்களிம் வெளிப்படையாகக் கூற பிரச்சனை பூதகரமாகியது.
பிரச்சனை பெரிதாவை உணர்ந்த சுனந்தா ரென்டெஜ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு நிறுவனம் தனக்கு அளித்திருந்த இலவசப் பங்குகளைத் திரும்பத் தருவதாக ஞாயிற்றுக் கிழமை (18-04-2010) அன்று அறிவித்தார்.
இந்நிலையில் சசி தரூர் பிரச்சனை காங்கிரசின் இமேஜைப் பாதிப்பதாகவும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருத்துகள் வெளியாகத் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை இரண்டாம் முறையாகச் சந்தித்த சசி தரூர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்தார். இவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட பிரதமர் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
source:inneram

0 கருத்துகள்: on "சர்ச்சைகளில் சிக்கி வந்த சசி தரூர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா"
கருத்துரையிடுக