12 ஏப்., 2010

இஸ்ரேல் என்.பி.டி உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அணுஆயுத உச்சி மாநாட்டில் முன்வைக்கும் துருக்கி

வாஷிங்டனில் நடக்க உள்ள அணுஆயுத உச்சி மாநாட்டில், இஸ்ரேல் என்.பி.டி உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் என்று துருக்கி நாட்டின் பிரதமர் ரெஜப் தய்யிப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குப் பகுதியில், அணுஆயுதங்கள் இல்லாமல் செய்ய இஸ்ரேலை சர்வதேச நாடுகள் வலியுறுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வாஷிங்டனிற்கு புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தய்யிப், இஸ்ரேலின் அணுஆயுத திட்டங்களுக்கு முன்னால் உலக நாடுகள் குருடர்களாக செயல்படுகின்றன என்றார். இஸ்ரேல் மத்திய கிழக்குப் பகுதியில் அணுஆயுதங்களை தயாரிக்கும் ஒரே நாடாக இருந்தும், என்.பி.டி உடன்படிக்கையினை கையெழுதிடவில்லை. இதற்கு உலக நாடுகள் இதுவரை ஏன்? என்று கூட கேட்கவில்லை. இதுக்குறித்து நாங்கள் இதை சர்வதேச நாடுகளிடம் வினவவுள்ளோம் என்று தய்யிப் ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
இதுகுறித்து, மாநாட்டில் பங்கு பெறும் 47 நாடுகளையும் தான் கேட்டுக்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் ஈரான் கையெழுத்திட்டதனால் இன்று ஈரான் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. என்.பி.டி உடன்படிக்கையினை கையெழுத்திடாத இஸ்ரேல் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
துருக்கியை அடுத்து எகிப்தும், அன்காராவும் இஸ்ரேலுக்கெதிராக இம்மாநாட்டில் குரலெழுப்புவதை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source:PressTV

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "இஸ்ரேல் என்.பி.டி உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அணுஆயுத உச்சி மாநாட்டில் முன்வைக்கும் துருக்கி"

noor சொன்னது…

world leaders must take action against isreal

muslim leaders also give pressure to intl community

கருத்துரையிடுக