வங்கதேசத்தில் அண்மையில் ஆட்சிக்கு வந்த ஷேக் ஹசினா அரசு இஸ்லாமிய சட்டங்களை முழுவதுமாக தகர்த்துவருகிறது.
இதில் ஒரு பகுதி நடவடிக்கையாக, அண்மையில் சட்டம் இயற்றுவதிலும் நடிவடிக்கை எடுப்பதியிலும் மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசிக்கும் சட்டம் தகர்கப்பட்டது. அனைத்து இஸ்லாமிய இயக்கங்களை தடைசெய்யும் நடவடிக்கையிலும் இறங்கியது. இதற்கு நீதி மன்றங்களும் துணைநின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த மாற்றங்களை கண்ட யு.எஸ், வங்கதேசத்தை பாராட்டியது மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து வங்காளத்தில் காங்கிரசை நிறுவிய யு.எஸ் காங்கிரஸ் தலைவர் ஜோஸப் க்ரோவ்லி கூறுகையில், "வங்கதேசத்தில் ஜனநாயகம் மலருவதை யு.எஸ் முழுமையாக ஆதரிப்பதாக தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளது என்றார். வங்கதேசம் இப்போது யு.எஸ்சின் முக்கிய கூட்டாளியாக மாறியிருப்பதாக அவர் சூளுரைத்தார்.
வறுமை, தட்ட்பவெப்ப பிரச்சனைகள் மற்றும் தீவிரவாதம் போன்ற சவால்களில் வங்கதேசம் சிக்கிருந்தாலும், அவ்வரசின் தற்போதைய சட்டங்கள் ஜனநாயகம் மலருவதை நிருபித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்களைத் தான் அமெரிக்கா விரும்பியதாகவும், அதை சாதித்தும் விட்டதாகவும் அவர் புகழ் பாடினார். வங்கதேசத்தை எடுத்துக்காட்டாக கொண்டு மற்ற நாடுகளும் இதுப்போன்ற மாற்றங்களை கொண்டுவரும் என்று அவர் நம்புவதாக" க்ரோவ்லி தெரிவித்தார்.
இந்த மற்றங்களில் முக்கிய பங்காற்றிய யு.எஸ் சார்மான் பர்மேன் மற்றும் சில அதிகாரிகளுக்கு க்ரோவ்லி நன்றி தெரிவித்தார். வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மையினரான இந்துக்களுக்கும், அஹமதிய்ய சமூகத்துக்கும் அரசு எல்லா துறைகளிலும் முன்னுரிமை அளிக்கவேன்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் 'வங்கதேசம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக' இதே யு.எஸ் கவுன்சிலில் விவாதிக்கபட்டதும், அதை தொடர்ந்து 2006 ல் தேர்தலை புறக்கணித்து ராணுவ ஆட்சி வந்ததும் நம் நினைவில் இருக்கும்.
இந்த கொடுமைகளை வங்கதேசத்தின் மக்கள் எதிர்த்தும், நீதிமன்றங்கள் மற்றும் யு. எஸ். போன்ற உலக நாடுகளின் தாண்டவத்திற்கு முன்னால் அவர்களின் அந்த எதிர்ப்பு பழிக்கவில்லை என்றால் அது மிகையாகாது.
source:The financial express
1 கருத்துகள்: on "வங்கதேசத்தில் அழிந்து வரும் இஸ்லாமிய சட்டங்கள். ஜனநாயகம் மலருவதாக அமெரிக்கா பாராட்டு"
I request Bangladesh govt to refer the quran verse that says "change yourself,otherwise Allah will change you (by transfering the power u have with you) " by Dr.S.Abdul Rahman
கருத்துரையிடுக