காபூல்:ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையின் ஒரு பகுதியான ஜெர்மன் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு ஆப்கான் ராணுவவீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை நேட்டோ அறிவித்துள்ளது.
வடக்கு ஆப்கானில் குண்டூஸ் மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புடையினரான அந்நிய நாட்டுப் படையினரில் மூன்றாம் இடத்திலிலுள்ள ஜெர்மன் படைக்கு நேற்று முன்தினம் தாலிபான் போராளிகளுடனான மோதலில் மூன்று ராணுவ வீரர்களை இழந்தது. ஏராளமான ராணுவவீரர்களுக்கு காயமும் ஏற்பட்டது.
ஆப்கான் ராணுவத்தினர் சிவிலியன் காரில் பயணம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது போராளிகள் எனக்கருதி சுட்டதாக நேட்டோ விளக்கமளிக்கிறது. ஆனால் குண்டூஸ் கவர்னர் தெரிவிக்கையில் ஆப்கான் ராணுவவீரர்கள் ராணுவ வாகனத்தில்தான் பயணம் செய்ததாக கூறுகிறார்.
தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு பழிவாங்க யாரைக் கொன்றால் என்ன?சாவது ஆப்கானிகள்தானே என்ற எண்ணம் ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படையினருக்கு இருந்திருக்கலாம்!
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆறு ஆப்கான் ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற ஜெர்மன் ஆக்கிரமிப்பு படை ராணுவ வீரர்கள்"
கருத்துரையிடுக