பிரான்சில் தற்ப்பொழுது இளைஞர்கள் உயர்தர ஹலால் உணவையே அதிகம் விரும்புகின்றனர். அதுவும் தாங்கள் பாரம்பரிய உணவை விட. இதனை கார்டியன் என்ற பத்திரிகை கூறுகிறது.
ஹலால் உணவிற்கான தேவை பிரான்சில் அதிகரித்து வருகிறது. ஒரு வருடத்தில் 15 சதவீத ஹலால் உணவு வகைகளின் தேவை அதிகரித்துள்ளதாக தகவல் கூறுகிறது.
சூப்பர் மார்க்கெட் குழுமமான கேஸினோ பல்வேறு ஹலால் இறைச்சி வகைகளை அதிக அளவில் சரக்கிருப்பு வைத்துள்ளது. ஹலால் உணவு வகைகளை சிறப்பான முறையில் விற்பனைச் செய்யும் பர்கர் கடைகளும், முஸ்லிம் கார்னர் கடைகளும் அதிகரித்து வருகின்றன. செல்வந்தர்களான முஸ்லிம் இளைஞர்கள் இதன் பின்னணியில் உள்ளனர்.
தகவல் தொடர்புத்துறை வல்லுநரான 33 வயது யானிஸ் புஆர்பி பாரிஸ் ஹலால் டாட் காம்(paris-hallal.com) என்ற இணையதளத்தை துவக்கியுள்ளார். இதில் பிரான்சில் ஹலால் உணவுகள் விற்பனைச் செய்யும் உணவகங்களின் பட்டியல் உள்ளது. யானிஸ் கூறுகையில், "எங்களது பெற்றோரும், பாட்டன்களும் பிரான்சிற்கு வந்தபொழுது கடுமையாக உழைத்து தங்களது குடும்பத்தினருக்கு உணவை அளித்தார்கள். ஆனால் என்னைப் போன்ற இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் நன்றாக படித்தோம். எங்களுக்கு நல்ல வேலையும், பணமும் உள்ளது. நாங்கள் லாபம் சம்பாதிக்க விரும்புகிறோம், பிரான்சு கலாச்சாரத்தை விட்டு வெளியே வந்து இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு ஒத்துத் தீர்ப்புச் செய்யாமல். நாங்கள் வெறும் எளிதாக கிடைக்கும் கபாப்களை மட்டும் விரும்பவில்லை. ஜப்பான், தாய், பிரான்சு உணவுவகைகளையும் விரும்புகிறோம்." என்றார்.
யானிசின் இணையதளத்தில் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 400 ஹலால் உணவகங்களின் பெயர் பட்டியல் உள்ளது. அவர் பிரான்சின் பல்வேறு நகரங்களுக்கு இதனை விரிவுப்படுத்த விரும்புகிறார்.
வட ஆப்பிரிக்காவிலிருந்து பிரான்சிற்கு வந்து குடிமக்களான முஸ்லிம்களுக்கு வருடத்திற்கு 5.5 பில்லியன் மதிப்பு யூரோக்களை செலவிடும் சக்தி உள்ளது.
source:islamonline.net
0 கருத்துகள்: on "பிரான்சில் அதிகரித்துவரும் ஹலால் உணவகங்கள்"
கருத்துரையிடுக