வாஷிங்டன்:அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்த தூண்டுகோலாக உள்ளார் எனக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவைச் சார்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் அன்வர் அல் அவ்லாகியைக் கொலைச் செய்ய ஒபாமா அரசு அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. இதனை உளவு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் பிறந்தவர். இவரது பூர்வீகம் யெமன். தற்ப்பொழுது யெமன் நாட்டில் தலைமறைவாக வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க ராணுவத்தில் மனோநிலை மருத்துவராக பணியாற்றிய நிதால் மாலிக் ஹஸன் டெக்ஸாசிலுள்ள ஃபோர்ட் ஹுடில் 13 ராணுவத்தில் பணியாற்றியவர்களை திடீரென சுட்டுக்கொன்றார்.
கடந்த 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று டெட்ராய்ட் சென்ற விமானத்தை குண்டுவைத்துத் தகர்க்க முயன்றார் என குற்றஞ்சுமத்தி கைதுச் செய்யப்பட்டார் நைஜீரியாவைச் சார்ந்த உமர் ஃபாரூக் அப்துல் முத்தலிப். இவர்களிருவருக்கும் அன்வர் அல் அவ்லாகிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றஞ் சாட்டுகிறது.
இதுத்தொடர்பாக அமெரிக்க தீவிரவாத எதிர்ப்பு அதிகாரியொருவர் கூறுகையில், "அவ்லாகி அரேபியத் தீபகற்பத்தில் அல்காய்தாவை இயக்குபவர். யெமன் மற்றும் சவூதி அரேபியாவில் தீவிரவாதத் தொடர்புகளை ஒருங்கிணைப்பவர் இவரே. தீவிரவாத நெட்வொர்க்கிற்கு தேர்வாளராக உள்ளார். அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் வாழும் அமெரிக்கர்களுக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதற்கான விபரங்களை அளித்துவருகிறார்." எனக் கூறினார் அவர்.
"அமெரிக்காவில் பிறந்த ஒருவரை கொல்லைச் செய்ய ஒபாமா அரசு பிரகடனப்படுத்தியது இதற்கு முன் நடந்திராத அபூர்வமான ஒன்றாகும்". என ஒரு அதிகாரி தெரிவித்தார்.
W.ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியில் மூத்த சட்டத்துறை அதிகாரியாகவிருந்த ஒருவர் இதுத்தொடர்பாக அவர் கூறுகையில், "ஜார்ஜ்புஷ்ஷின் ஆட்சியின் போது இவ்வாறு எவரையும் கொல்ல உத்தரவிட்டதாக தெரியவில்லை." என்றார்.
அமெரிக்க தேசிய உளவுத் துறையின் இயக்குநர் டென்னிஸ் சி. பிளேயர் கூறியதாவது, "நாங்கள் நேரடியாக தீவிரவாதுகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கிறாம். நேரடி நடவடிக்கையில் ஒரு அமெரிக்கரை கொல்வதும் இதில் அடங்கும். இதற்கு சிறப்பான அனுமதியைப் பெற்றுள்ளோம்" என்றார். ஆனால் அவர் அன்வர் அவ்லாகியின் பெயரைக் குறிப்பிடவில்லை.
அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவின் குறியில் உள்ளார் என்பதை கடந்த ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சும், ராய்டர்ஸ் செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டிருந்தன. அதில் அவ்லாகியை பிடித்துக் கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க காங்கிரஸ் 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அல்காயிதா இயக்கத்திற்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே அல்காயிதாவுடன் தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டி தனிநபர்களை பிடித்துக் கொல்ல சி.ஐ.ஏ மற்றும் ராணுவத்தினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது இதனை முன்னாள் அதிகாரியொருவர் தெரிவிக்கிறார்.
அன்வார் அல் அவ்லாகியைப் பொறுத்தவரை அவர் அமெரிக்க குடிமகன் ஆகையால் அவரை ஹிட்லிஸ்டில் உட்படுத்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் அனுமதியளித்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
source:Newyorktimes
0 கருத்துகள்: on "அமெரிக்க அறிஞரை கொலைச்செய்ய ஒபாமா அரசு ஒப்புதல்"
கருத்துரையிடுக