8 ஏப்., 2010

எஸ்.ஐ.டியிலிருந்து குஜராத் அதிகாரிகள் நீக்கப்பட்டது மிகவும் திருப்தி – ஜாகியா

காந்திநகர்:2002ம் ஆண்டு நடந்த பாசிச சக்திகளின் கோரத் தாண்டவத்தின் சிறப்பு புலனாய்வு விசாரணை ஆணையத்திலிருந்து 2 குஜராத் மேல் அதிகாரிகள் நீக்கப்பட்டிருப்பது திருப்தி அளிப்பதாக கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னால் காங்ரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி மனைவி ஜாகியா தெரிவித்துள்ளார்.

அவ்வம்மையார் கூறுகையில், தான் குஜராத்தின் இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள் கீதா ஜொஹ்ரி மற்றும் சிவாநந்த் ஷா எஸ்.ஐ.டியில் இடம்பெற்றது குறித்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இவ்விரு அதிகாரிகள் வேண்டுமென்றே வழக்கின் திசையை திருப்ப முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார். இப்பொழுது இவ்விரு அதிகாரிகள் நீக்கப்பட்டிருப்பது, நீதி உண்மையான வடிவத்தில் வெளிவர வாய்ப்புகள் அதிகமுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிவாநந்த்ஷா:சூரத் மாநில போலிஸ் கமிஷ்னர். கலவரத்தில் குற்றம் சாட்டப்படுள்ள 62 குற்றவாளிகளில் அவரும் ஒருவர் என்பது அதிர்ச்சிக்குரியது.

கீதாஜொஹ்ரி:ராஜ்காட் மாநில போலீஸ் கமிஷ்னர். சொராஹ்ராப்தீன் கொலை வழக்கை விசாரித்தவர். சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானவர். பிறகு அவ்வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.

முன்னதாக, இவ்விரு அதிகாரிகளை நீக்கக்கோரி ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளி மற்றும் சட்டத்தை விற்பவர்கள், எஸ்.ஐ.டி என்ற குஜராத் கலவர விசாரணை ஆணையத்தில் மூத்த அதிகாரிகளாக இதுவரையிருந்ததை யோசித்தால், விசாரணையின் உண்மைத் தன்மையை கேள்விக் குறியாகவே பார்க்க முடிகிறது.
source:Siasat

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எஸ்.ஐ.டியிலிருந்து குஜராத் அதிகாரிகள் நீக்கப்பட்டது மிகவும் திருப்தி – ஜாகியா"

கருத்துரையிடுக