'பிரேசில் ஈரானிடம் நல்ல உறவுகளை விரும்புவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் ஐ.நாவின் வர்த்தகத் தடைகள் அந்நாட்டை மேலும் வலுப்படுத்தும்' என்று பிரேசிலின் பிரதமர் செல்சொ அமொரிம் எச்சரித்துள்ளார்.
'ஈரான் போன்ற நாடுகளின் மீது வர்த்தகத் தடைகள் போடுவதின் மூலம், மற்ற பிற நாடுகளின் உதவியுடன், அது தன் கொள்கைகளை, மேலும் ஆழமாக பதித்துக் கொள்ளும்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
'வர்த்தகத் தடைகள் ஒரு நாட்டின் ஏழை மக்களைத் தான் மிகவும் பாதிக்கும் என்றும் அதை பிறபிப்பதன் மூலம் ஈரானை உலக நாடுகளிருந்து ஒதுக்குவதைப் போல் ஆகிவிடும்' என்றார்.
'இந்நேரத்தில், பிரேசில் ஈரானை ஆதிரிக்கிறதா என்பது முக்கியமில்லை மாறாக பிரேசில் உலகத்தில் அமைதியைத் தான் விரும்புவதாக' அவர் தெரிவித்தார். முந்தைய காலத்திலிருந்து இதுவரை டெஹ்ரானின் அணுஆயுத விஷயத்தில் பிரேசில் எப்போதுமே சமாதானத்தை தான் விரும்பியதாக அவர் நினைவூட்டினார்.
source:Gulfnews
0 கருத்துகள்: on "ஈரான் மீதான வர்த்தகத் தடை அந்நாட்டை பாதிக்காது: பிரேசில்"
கருத்துரையிடுக