டெஹ்ரான்:அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்காவின் யுக்தியை அண்மையில் அதிபர் ஒபாமா மற்றியதை தொடர்ந்து, ஈரான் அதிபர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அரசு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக கூறும் ஒபாமாவின் வார்தைகள் முழுக்க முழுக்க பொய்.
அவர் (ஒபாமா), யு.எஸ்யிற்க்கு கட்டுப்படாத நாடுகளை அணுஆயதம் மற்றும் கெமிக்கல் ஆயுதங்களை வைத்து தான் மிரட்டியுள்ளார்" என்று குற்றம் சாட்டினார். "ஜாக்கிரதை, நீங்களும் (ஒபாமா) புஷ்யின் பாதையை பின்பற்றினால் மக்கள் புஷ் அரசின் பற்களை உடைத்ததுப் போல், உங்களின் பற்களையும் உடைப்பார்கள்" என்று அவர் எச்சரித்தார்.
யு.எஸ் தனது அணுஆயுத கொள்கையை அந்மையில் மாற்றியது. அதன்படி, மிகவும் மோசமான சூழலில்தான் யு.எஸ் அணுஆயுதத்தை தாக்குதல் நடத்தப் பயன்படுத்தும் என்றும் அணுஆயுதமில்லாத நாடுகளை யு.எஸ் தாக்காது என்றும் அதிபர் ஒபாமா கூறியிருந்தார். ஆனாலும், இந்த கொள்கை ஈரான் மற்றும் கொரியா நாடுகளுக்கு பின்பற்றப்படாது என்று எச்சரித்ததை தொடர்ந்து அஹ்மத் நிஜாதின் இக்கருத்துக்கள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
source:Timesofindia
0 கருத்துகள்: on "மக்கள் உங்கள் பற்களையும் உடைப்பார்கள் – அஹ்மத் நிஜாத்"
கருத்துரையிடுக