8 ஏப்., 2010

பெண்கள் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்தியா ஃபெரடர்னிட்டி ஃபோரம் தம்மாம் தமிழ் பிரிவின் சார்பாக பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கோபர் நகரில் ஏப்ரல் 2, 2010 அன்று மாலை நடத்தப்பட்டது. சகோதரி ரெஜினா அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சகோதரி ரஷிதா அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். இந்தியா ஃபெரடர்னிட்டி ஃபோரம் ஆற்றி வரும் சமுதாய பணிகளை சகோதரி தாஃபிலா பானு ஆலிமா அவர்கள் விவரித்தார். ஃபெரடர்னிட்டி ஃபோரம் முன்னின்று நடத்திய சில வழக்குகளை விவரித்த அவர், முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சமூக மக்களுக்கும் ஃபெரடர்னிட்டி ஃபோரம் பணியாற்றி வருவதையும் தனது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சகோதரி ஸமீரா பேகம் அவர்கள் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். நமது முன்னோர்களின் ஆரோக்கியத்துடன் நமது ஆரோக்கியத்தை ஒப்பிட்டு கூறினார். நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிக்கேற்ப ஓய்வு நேரம் மற்றும் ஆரோக்கியம் என்ற இரு அருட்கொடைகளை நாம் வீணடித்து வருவதை தனது உரையில் குறிப்பிட்டார். அடுத்ததாக

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த, தம்மாம் மெடிக்கல் டிஸ்பன்ஸரியிpல் பணியாற்றும் டாக்டர் புனிதா சுரேஷ் அவர்கள் உரையாற்றினார். வளைகுடா நாடுகளில் நாம் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகளையும் உணவு முறைகளையும் தனது உரையில் குறிப்பிட்டார். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினருக்கு சகோதரி ராபியா அவர்கள் நினைவு பரிசினை வழங்கினார்கள். இறுதியாக சகோதரி ஸமா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சியில் ஏறத்தாழ நூறு பெண்கள் கலந்து பயன் பெற்றனர்.

சவூதியின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் சமூக பெண்களுக்காக நடத்தப்பட்ட ஆரோக்கியம் சம்பந்தமான முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:ஊடக துறை,இந்தியா ஃபெரடர்னிட்டி ஃபோரம்,தம்மாம்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பெண்கள் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி"

கருத்துரையிடுக