பாரிஸ் பிரான்சு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள துருக்கி பிரதமர் ரிஸப் தய்யிப் எர்துகான் பாரிஸில், "இஸ்ரேல் மத்தியக்கிழக்கில் மிகப்பெரும் அச்சுறுத்தலான நாடாக விளங்குகிறது" என்றார்.
சமீபகாலமாக இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையேயான உறவு மிகவும் மோசமடைந்து வருகிறது. ஒரு நாடு அதிக அளவிலான படையை ஃபலஸ்தீன் காஸ்ஸாவுக்கு அனுப்பி அங்கு பாஸ்பரஸ் குண்டுகளை வீசி நாசம் விளைவிப்பதை நாங்கள் பாராட்டவா முடியும்? என வினவினார்.
மேலும் எர்துகான் கூறியதாவது: "காஸ்ஸாவின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் கூறிய காரணம் பொய்யானது ஆகும். இது ஐ.நா வால் நியமிக்கப்பட்ட கோல்ட்ஸ்டோனின் 575 பக்க அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் இஸ்ரேலின் நடவடிக்கை போர்க்குற்றமென்றும், மனித இனத்திற்கெதிரான குற்றமென்றும் தெளிவாக விசாரனை மேற்க்கொண்டதன் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.
கோல்ட்ஸ்டோன் ஒரு யூதராக இருந்தும் தெளிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்காக இதனைத் தெரிவிக்கவில்லை. எங்களது நிலை மனிதத்தன்மை சார்ந்ததாகும். மத்தியக்கிழக்குப் பகுதியில் இஸ்ரேல்தான் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது." என்றார் அவர்.
இதற்கிடையே எர்துகானை வெனிசுலாவின் ஹீகோ சாவேசுடனும், லிபியாவின் கத்தாபியுடனும் ஒப்பீடுச் செய்த இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் லிபர்மனின் பேச்சுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லிபர்மன் கூறுகையில், "எர்துகான் சாவேஸ் மற்றும் கத்தாபியைப் போல் மாறிவருகிறார். துருக்கி எங்களுக்கு பிரச்சனையல்ல மாறாக எர்துகான் தான் பிரச்சனைக்குரியவர்" என்று கூறினார்.
துருக்கி பிரதமர் எர்துகான் சமீபத்தில் பிரான்சு நாட்டின் லி ஃபிகாரோ என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "இஸ்ரேலுக்கு அமைதி நிலை நாட்டுவதில் அக்கறையில்லை மத்தியக்கிழக்கு பகுதியை போருக்கு அழைத்துச் செல்கிறது இஸ்ரேல்." என்றார் எர்துகான்.
இஸ்ரேல் தான் மத்தியக்கிழக்கில் அணு ஆயுதம் கொண்ட நாடு என திரும்பத் திரும்பக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
source:presstv
0 கருத்துகள்: on "மத்தியக்கிழக்கில் இஸ்ரேல் மிகப்பெரும் அச்சுறுத்தல்- துருக்கி பிரதமர் எர்துகான்"
கருத்துரையிடுக