ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) முகாம்கள் மீது நக்ஸல்கள் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் உயிர்ச் சேதம் குறித்த தகவல் இல்லை.
தந்தேவாடா மாவட்டத்தில் கன்கெர் லங்கா, பொட்டம்பள்ளி மற்றும் பேஜி ஆகிய இடங்களில் உள்ள பாதுகாப்புப் படை முகாம்கள் மீது செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் நக்ஸல்கள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். உயிர்ச் சேதம் குறித்த தகவல் இல்லை. இரவு 9.30 மணி வரை சண்டை நீடித்ததாக சத்தீஸ்கர் கூடுதல் காவல்துறைத் தலைவர் ராம் நிவாஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

source:dinamani
0 கருத்துகள்: on "சிஆர்பிஎஃப் முகாம்கள் மீது நக்ஸல்கள் திடீர் தாக்குதல்"
கருத்துரையிடுக