கொழும்பு:புத்தமதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சாரா மாலினி பெரேரா நீதிமன்றத்தால் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த புத்த பெண்மனியான சாரா மாலினி பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றதன் பின்னர் அங்கு இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்.
இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் இஸ்லாத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது கடந்த மார்ச் 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஒரு மாத காலம் சிறையில் இருந்த சகோதரி சாரா, நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவரை 5000 ரூபா ரொக்கப் ஜாமீனிலும், தலா 50 ஆயிரம் ரூபாய் கொண்ட இருநபர் ஜாமீனிலும் செல்ல கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி பீ.எஸ்.ரணசிங்க உத்தரவிட்டார்.
இவ்வழக்கு மீண்டும் மே மாதம் 19ம் தேதிக்கு பின் விசாரணைக்கு வருவதுடன், அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: on "இலங்கை:புத்தமத அவமதிப்பு குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்ட சாரா மாலினி ஜாமீனில் விடுதலை"
கருத்துரையிடுக