12 ஏப்., 2010

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் இஸ்ரேல் ஆறாவது இடத்தில்

லண்டன்:அணு ஆயுத சேகரிப்பில் உலகில் இஸ்ரேல் ஆறாவது இடத்திலிருப்பதாக பிரபல பிரிட்டன் ராணுவ பத்திரிகை இதழான ஜெயின்ஸ் டிஃபன்ஸ் வீக்லி தெரிவித்துள்ளது. இது பிரிட்டனின் ஆயுத சேகரிப்பிற்கு சமமானது எனவும் அப்பத்திரிகை கூறுகிறது.

தரை,வான்,கடல் வழியாக செலுத்தக்கூடிய 100 முதல் 300 வரையிலான அணு ஆயுதங்கள் இஸ்ரேல் வசம் உள்ளது. தரையிலிருந்து ஏவும் மத்திய தூர, நீண்ட தூர ஏவுகணைகளான ஜெரிகோ-1 மற்றும் ஜெரிகோ-2வும் தான் இஸ்ரேலின் முக்கிய சக்தியாகும்.

2005 ஆம் ஆண்டிற்கு பிறகு இஸ்ரேல் 7800 கிலோமீட்டர் தூரம் வரைச்செல்லும் ஜெரிகோ-3 ஏவுகணைகளையும் சேகரித்து வைத்துள்ளது. பாரம்பரிய அணுஆயுதங்களுடன் கண்ணி வெடிக்குண்டு, வெடிக்குண்டுகள் வடிவிலும் இஸ்ரேல் அணு ஆயுதங்களை தயார் செய்துவைத்துள்ளது.

1958 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. இவ்வாறு ஜெயின்ஸ் டிஃபன்ஸ் வீக்லி பத்திரிகையின் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்காசியாவில் அணுஆயுத சக்தியுள்ள ஒரே நாடு இஸ்ரேலாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் இஸ்ரேல் ஆறாவது இடத்தில்"

கருத்துரையிடுக