வாஷிங்டன்:ஈராக்கியர்களை அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் கொலைச்செய்யும் வீடியோ காட்சிகள் கிடைத்தது அமெரிக்க ராணுவ அதிகாரிகளிடமிருந்து என அவ்வீடியோவை வெளியிட்ட விக்கிலீக் என்ற இணையதளத்தின் துணை ஸ்தாபகர் ஜுலியான் தெரிவித்துள்ளார்.
வீடியோ கிடைத்தபொழுது அது ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடையதாக இருக்கும் என எண்ணியதாகவும், வீடியோவை கண்டபொழுதுதான் தாங்கள் எதார்த்தமான நிகழ்வை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த திங்கள் கிழமை அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர்களிருந்து அமெரிக்க ராணுவத்தினர் ஈராக் குடிமக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் காட்சிகளை விக்கீ லீக் இணையதளம் வெளியிட்டது. இது உலக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாதாரண அப்பாவி மக்களை சுட்டுக்கொல்லும் பொழுது சந்தோஷத்துடன் அமெரிக்க் ராணுவத்தினர் உரையாடுவதும் இவ்வீடியோவில் கேட்கலாம். இது உலகமுழுவதும் அமெரிக்காவிற்கு பெரும் கண்டனத்தை பெற்றுத் தந்தது.
வீடியோ உண்மைதான் என்று அமெரிக்க ராணுவ மையம் ஒப்புக்கொண்டது. இவ்வீடியோக்காட்சிகளை வெளியிட்டதற்காக அதிகாரிகள் தங்கள் பணியாளர்களை தொந்தரவுச் செய்வதாக ஜுலியான் தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக்கியர்களை கொலைச்செய்யும் வீடியோவை வெளியிட்டது அமெரிக்க ராணுவத்தினர்"
கருத்துரையிடுக