நியூயார்க்:அல்காயிதாவின் முக்கியத் தலைவர் எனவும் மிகப்பெரிய பயங்கரவாதி எனவும் அமெரிக்காவால் விளம்பரப்படுத்தப்பட்ட அபூ சுபைதா அவ்வளவு பெரிய பயங்கரவாதி ஒன்றும் இல்லை என அமெரிக்க நீதி மற்றும் சட்டத்துறை தெரிவித்துள்ளது.
அபூ சுபைதா அளித்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில் அமெரிக்க நீதி மற்றும் சட்டத்துறை அளித்துள்ள வாக்குமூலத்தில் தான் இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டனும், ஜார்ஜ்-w-புஷ்ஷும் கூறியது சுத்த பொய் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள குவைத்தைச் சார்ந்த அபூ சுபைதா கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் வைத்து கைதுச்செய்யப்பட்டார். விசாரணையின் போது போதிய தகவல்கள் அபூ சுபைதாவிடமிருந்து கிடைக்காததால் அபூ சுபைதாவை 83 தடவை தலையை தண்ணீரில் மூழ்கடித்து சித்திரவதைச் செய்யும் வாட்டர்போர்டு என்ற கொடூரத்திற்கு ஆளாக்கினார்கள் அமெரிக்க அதிகாரிகள்.
ஜார்ஜ் புஷ்ஷிடமிருந்து கிடைக்கும் காசுக்காக எழுதும் எழுத்தாளர் மார்க் தீஸன் சமீபத்தில் வெளியிட்ட நினைவுக் குறிப்புகளில் முக்கியமான பகுதி வாட்டர்போர்டிங்கை நியாயப்படுத்தி எழுதியுள்ளார்.
1998 ஆம் ஆண்டு நைரோபியில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட நிகழ்விலிருந்து செப்டம்பர் 11 தாக்குதல் வரை உள்ளிட்ட எல்லா தாக்குதல்களுக்கும் அபூசுபைதாதான் காரணம் என அமெரிக்கா பிரச்சாரம் செய்தது.
ஆனால் அமெரிக்க நீதி மற்றும் சட்டத்துறை அளித்துள்ள சத்திய வாக்குமூலத்தில் கூறுவது:அபூ சுபைதாவுக்கு எவ்வித தீவிரவாதத் தாக்குதலுடனும் நேரிடையாக தொடர்பு இல்லை என்று. மேலும் அவர் அல்காயிதாவின் உறுப்பினரும் அல்ல என்றும் ஆனால் அவர் அல்காயிதாவின் ஆதரவாளர் என்பதால் தொடர்ந்து அவரை சிறையில் அடைக்கவேண்டும் என்றும் கூறுகிறது. இதன்மூலம் செப்டம்பர் 11 இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட வழக்கில் விசாரணை மேற்க்கொண்ட கமிஷனின் அறிக்கையில் கூறப்பட்டவை பலவும் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் செப்.11 தாக்குதலை திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் அபூசுபைதா என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அபூ சுபைதா அல்காயிதாவின் தலைவர் அல்ல- அமெரிக்க சட்டத்துறை"
கருத்துரையிடுக