11 ஏப்., 2010

ஈராக் ஆக்கிரமிப்பு நினைவுதினம்: ஈராக் முழுவதும் கண்டனப் போராட்டங்கள்

பாக்தாத்:அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையின் தலைமையில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஈராக்கை ஆக்கிரமிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு ஈராக்கின் பல இடங்களிலும் போராட்டம் நடத்தினர். மேலும் ஈராக் மக்கள் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

புண்ணியஸ்தலமான நஜஃபில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். அமெரிக்க, பிரிட்டன், இஸ்ரேல் கொடிகளை நிலத்தில் போட்டு காலால் தேய்த்த போராட்டக்காரர்கள் ஆக்கிரமிப்பை அதிவிரைவில் முடிவுக்குக் கொண்டுவர கோரிக்கை விடுத்தனர். மேலும் அமெரிக்க கட்டுப்பாட்டிலிலுள்ள சிறைகளில் வாடும் ஈராக்கியர்களை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ளதாக பொய்க்கூறி கடந்த 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது. சதாம் ஹுசைன் இரத்தசாட்சியான பிறகு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஈராக் ஆக்கிரமிப்பு நினைவுத் தினமாக கடைப்பிடிப்பது வழக்கமாகும்.

ஈராக்கின் பல இடங்களிலும் நினைவுத் தினத்தை சுன்னி-ஷியா முஸ்லிம்கள் ஒன்றினைந்து கடைப்பிடித்தனர். ஏழுவருட அந்நிய ஆக்கிரமிப்பில் 10 லட்சம் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறினர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு இறுதியில் ஈராக்கிலிருந்து ராணுவம் வாபஸ் பெறப்படும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக் ஆக்கிரமிப்பு நினைவுதினம்: ஈராக் முழுவதும் கண்டனப் போராட்டங்கள்"

கருத்துரையிடுக