28 ஏப்., 2010

கெச்சப்,சாஸ் போன்ற பொருட்களில் உப்பின் அளவை குறைக்க முடிவு

அமெரிக்காவின் பிரபல உணவு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் உப்பின் அளவை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.

உணவில் அதிக உப்பு கலப்பதால் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் இந்த நோய்களால் இறக்கின்றனர். நியூயார்க்கில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 23 ஆயிரம் பேர் மேற்கண்ட பிரச்னைகளால் இறந்து விடுகின்றனர்.எனவே, உணவுகளில் உப்பின் அளவை குறைக்கும் படி நியூயார்க் மேயர் ப்ளூம்பெர்க் பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த பிரசாரத்தின் பலனாக வீட்டு சமையலில் உப்பின் அளவை பெரும்பாலோர் குறைத்து விட்டனர். ஓட்டல்களிலும் இந்த பிரசாரத்தின் பலனாக உணவில் உப்பின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் சுவைக்காக கூடுதலான உப்பை கலந்து விற்று வந்தன. மேயர் ப்ளூம்பெர்க்கின் உத்தரவு படி, ஸ்டார்பக், மார்ஸ்புட், சப்வே, வொயிட்ரோஸ் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் உணவில் உப்பின் அளவை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இதன் படி சான்ட்விச்,கெச்சப்,சாஸ் போன்ற பொருட்களில் உப்பின் அளவு குறைக்கப்பட உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கெச்சப்,சாஸ் போன்ற பொருட்களில் உப்பின் அளவை குறைக்க முடிவு"

கருத்துரையிடுக