கார்த்தூம்:வடக்கு கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் அதிபர் தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்ததைத் தொடர்ந்து நேசனல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமர் அல் பஷீர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உமர் அல் பஷீர் அதிபராக நீடிப்பார் என தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சூடான் தேர்தல் கமிஷன் சேர்மன் அபில் அலியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
1,01,14,310 வாக்குகளில் 68 சதவீத வாக்குகளைப் பெற்ற பஷீர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதேவேளையில் சூடான் பீப்பிள்ஸ் லிபரேசன் மூவ்மெண்ட் தலைவர் ஸல்வா கீர் மாயார்டிட் தெற்கு சூடான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பகுதி சுய ஆட்சி மாகாணமான தெற்கு சூடானில் மட்டும் போட்டியிட்ட ஸல்வா 93 சதவீத வாக்குகளைப்பெற்று பெரும்பான்மையை நிரூபித்தார். பஷீருக்கு அடுத்த இடத்தைப்பெற்றவர் எஸ்.பி.எல்.எம் வேட்பாளர் யாஸிர் அர்மனாவார்.
முன்னாள் பிரதமரும் நேசனல் உம்மா கட்சியின் வேட்பாளருமான ஸாதிக்குல் மஹ்திக் 96,868 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதேவேளையில் சூடான் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முஹம்மது இப்ராஹீம் அதிபர் தேர்தலில் மிகவும் பின் தங்கிவிட்டார். சூடானில் முதல் முறையாக பெண் வேட்பாளரான ஃபாத்திமா அப்துல் மஹ்மூதிற்கு 30,562 வாக்குகள் கிடைத்தன.
அதேவேளையில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள பஷீருக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தர்ஃபூர் போர் குற்றத்திற்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "உமர் அல் பஷீர் மீண்டும் சூடான் அதிபராக தேர்வு"
கருத்துரையிடுக