28 ஏப்., 2010

உலகின் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்குகிறது இந்தியா

உலகிலேயே மிகப் பெரிய ராணுவ போக்குவரத்து விமானமான சி17'குளோப் மாஸ்டர்' எனப்படும் 10 மாபெரும் ராணுவ போக்குவரத்து விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ளது.

இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 18,000 கோடி இருக்கும் என்று தெரிகிறது. மேலும் ஸ்பேர்கள், இந்திய விமானப் படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி, உதவி, சர்வீஸ் கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்தால் ரூ. 28,000 கோடி வரை செலவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

போயி்ங் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானங்கள் தான் உலகிலேயே மிகப் பெரிய ராணுவ போக்குவரத்து விமானங்களாகும்.இதில் டாங்கிகள் உள்ளிட்ட கவச வாகனங்கள், பீரங்கிகள் ஆகியவற்றை கொண்டு செல்ல முடியும். மேலும் நூற்றுக்கணக்கான படையினரை ஒரே நேரத்தில் அழைத்துச் செல்ல முடியும்.

இப்போது அமெரிக்கா தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் கத்தார், ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றின் விமானப் படைகளிடம் மட்டும் தான் இந்த விமானங்கள் உள்ளன. இப்போது முதல் முறையாக இவற்றை இந்தியாவுக்குத் தரவுள்ளது அமெரிக்கா.

ஏற்கனவே அமெரிக்காவிடமிருந்து ரூ. 10,500 கோடி மதிப்பில் எட்டு பி-81 ரக கடல் பகுதி கண்காணிப்பு உளவு விமானங்களையும், ரூ. 5,000 கோடிக்கு ஆறு சி-130 ஜே 'சூப்பர் ஹெர்குலிஸ்' ராணுவ சரக்கு விமானங்களையும் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலகின் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்குகிறது இந்தியா"

கருத்துரையிடுக