28 ஏப்., 2010

முஸ்லிம் சமூகத்தை நெருங்குவதற்கான முயற்சி தொடரும்: பாரக் ஒபாமா

வாஷிங்டன்:முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி தொடரும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நடந்த 50 முஸ்லிம் நாடுகளிலிலுள்ள தொழிலதிபர்கள் மாநாட்டில் உரையாற்றினார் அவர். முஸ்லிம் உலகத்துடனான உறவை பலப்படுத்துவதற்காக கல்வித்துறையிலும், தொழில்துறையிலும் ஏராளமான திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

தீவிரவாதத்தை ஒழித்துவிட்டு பொருளாதார வளர்ச்சியை உறுதிச் செய்யவும் மத்திய ஆசியாவில் ஆசுவாசமான சமாதானத்தை நிறுவுவதிலும் அமெரிக்கா உறுதிப்பூண்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

எந்த தடைகள் ஏற்பட்டாலும், இரு நாடுகளுக்கிமிடையே ஏற்றுக் கொள்ளத்தக்க சமாதான முயற்சிகள் தொடரும்.ஆனால், தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்க புதிய முயற்சி தேவை என்றும் ஒபாமா தெரிவித்தார்.

இதுபோல் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் போராளிகளுக்கெதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவதிலும் அமெரிக்கா உறுதிப்பூண்டுள்ளது என்றும், போராளிகளை தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்க புதிய நட்புறவுகளை தேடுவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் பெண்களுக்கு அமெரிக்காவில் intern ஆக பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும் என ஒபாமா வாக்குறுதியளித்தார். கடந்த ஆண்டு கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஒபாமா நடத்திய உரையில்;"முஸ்லிம்களும், அமெரிக்காவும் பரஸ்பர மதிப்பு ரீதியான புரிந்துணர்வுக் கொள்ளவேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம் சமூகத்தை நெருங்குவதற்கான முயற்சி தொடரும்: பாரக் ஒபாமா"

கருத்துரையிடுக