8 ஏப்., 2010

ஹைதராபாத் கலவரத்தின் பின்னணியில் சதித்திட்டம்: புலனாய்வுக்குழு

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் நடந்த மதக்கலவரத்தின் பின்னணியில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

கர்நாடகா, மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள் கலவரத்தில் பங்கேற்றதாக புலனாய்வில் கண்டறிந்துள்ளதாக போலீஸ் கூறுகிறது.

தெலுங்குதேசம் கவுன்சிலர், பா.ஜ.க கவுன்சிலர் வைகுண்டம் ஆகியோரை போலீஸ் விசாரணைச் செய்து வருகிறது. கலவரத்தில் முக்கிய பங்காற்றியது இவர்கள்தான் என்று கருதப்படுகிறது.

2003 ஆம் ஆண்டு ஹைதராபத்தில் தாப்பயபுத்ரா என்ற பகுதியிலிருந்து இரண்டு கிறிஸ்தவ பாதிரியார்களை கடத்திச் சென்றுக் கொலைச்செய்த வழக்கில் குற்றவாளியும் ஹிந்துவாஹினி என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ராஜுசிங்கைப் பற்றியும் போலீஸ் விசாரித்து வருகிறது.

மூஸபவுளி என்ற கோயிலில் நடந்த தாக்குதலிலும், அத்தாக்குதல் தொடர்பாக எஸ்.எம்.எஸ் அனுப்பிப்பியதிலும் ராஜுசிங் முக்கிய பங்கு வகித்ததாக போலீஸ் கருதுகிறது.

போலீஸ் புலனாய்வு செய்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் இவர் தொலைக்காட்சியில் தோன்றி போலீஸையும், மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பையும் குற்றஞ்சாட்டினார்.

பீகம் பஸாரில் பஜ்ரங்தள் நடத்திய போராட்டத்திற்கு தலைமைத் தாங்கியது வைகுண்டம்தான் என்று போலீஸ் கருதுகிறது. பஜ்ரங்தள் நடத்திய பேரணியைத் தொடர்ந்துதான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிற மாநிலத்தவர்களுடனான வன்முறையாளர்களின் தொடர்புக்கான ஆதாரத்தை கண்டறிவதற்காக சிலரின் தொலைப்பேசி எண்களை போலீஸ் பரிசோதித்து வருகிறது. எஸ்.எம்.எஸ் அனுப்பியவர்கள் முழு விசாரணையிலும் கவனத்தில் கொள்ளப்படுவர் என மூத்த போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக இரும்புத்தாது தோண்டி எடுத்தவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுத்த ரோஸய்யா அரசின் ஸ்திரத்தன்மைய இல்லாமலாக்க சிலர் உருவாக்கியதுதான் ஹைதராபாத் கலவரம் என்று சில பத்திரிகைகள் உளவுத்துறை வட்டாரங்களை மேற்க்கோள்காட்டி கூறுகின்றன.
அதேவேளையில் கர்நாடகா அமைச்சரும், இரும்புச் சுரங்கத்தின் உரிமையாளருமான ஜி.ஜனார்த்தன் ரெட்டியிடமிருந்து தான் பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை மறுக்கிறார் பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி.

ஹைதராபாத்தில் நிலைமை சீராகவே ஆந்திராவின் இதரபாகங்களில் கலவரத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. நால்கொண்டாவில் கடந்தவாரம் ஒரு மஸ்ஜிதின் கேட்டையும், மதில் சுவரையும் இடித்துத் தள்ளியுள்ளனர் வன்முறையாளர்கள். இது பிரச்சனைக்கு காரணமானது. சமுதாயத் தலைவர்களும், போலீஸும் தலையிட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

வன்முறையாளர்களை உடனடியாக கைது செய்வோம் என போலீஸ் சூப்பிரண்டண்ட் ராஜேஷ்குமார் தெரிவித்தார். நேற்றுமுன் தினம் ரஜீந்தர் நகரில் சிலர் வன்முறையை தூண்ட முயன்றதை ஊர்மக்கள் தலையிட்டு அதனை முறியடித்தனர். ஊர்மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வன்முறையைத் தூண்ட முயன்றவர்களை போலீஸ் கைதுச்செய்தது.

ஆதிலாபாத்திலும், நிஸாமாபாத்திலும் போலீஸ் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹைதராபாத் கலவரத்தின் பின்னணியில் சதித்திட்டம்: புலனாய்வுக்குழு"

கருத்துரையிடுக