17 மே, 2010

கோவா குண்டுவெடிப்பு-ஹிந்து தீவிரவாதிகள் 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஹிந்துத் தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் உறுப்பினர்கள் நான்கு பேர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

11 பேரில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டு விட்டனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்.

சந்தேகப் பட்டியலில் இடம் பெற்றிருந்த மல்கொண்டா பாட்டீல், யோகேஷ் நாயக் ஆகிய இருவரும் குண்டுவெடிப்பில் காயமடைந்து பின்னர் உயிரிழந்து விட்டனர்.

11 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் மற்றும் நாட்டின் மீது போர் தொடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மல்கொண்டா பாட்டீல் சனதான் சன்ஸ்தாவின் தீவிர உறுப்பினர்களில் ஒருவன், மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலையச் சேர்ந்தவன். நாயக் கோவாவைச் சேர்ந்தவன்.

சனாதன் சன்ஸ்தா அமைப்பு ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோவா குண்டுவெடிப்பு-ஹிந்து தீவிரவாதிகள் 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல்"

கருத்துரையிடுக