பாரிஸ்:பிரான்சின் தலைநகரின் பல பகுதிகளிலும் போலீஸ் நடத்திய சோதனையில் 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதக் குற்றம் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் 4 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு ஆட்படுத்தப்படுவார்கள் எனவும் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானிற்கும் பாகிஸ்தானிற்கும் போராளிகளை தேர்வுச் செய்யும் நெட்வொர்க் பிரான்சில் செயல்படுவதாக வெப் மேகசின் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் சோதனைக்கு உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் துனீசியாவைச் சார்ந்தவர்களாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஃபிரான்சில் 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது"
கருத்துரையிடுக