வாஷிங்டன்:துருக்கியுடனான ஈரானின் அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும், பொருளாதார தடை உள்ளிட்ட ஈரானுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க இயலாது எனவும் அமெரிக்க அறிவித்துள்ளது.
ஈரானின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக 20 சதவீத செறியூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பெறுகிறது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரோபர்ட் கிப்ஸ் குற்றஞ்சாட்டுகிறார்.
சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஈரானிற்கெதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க இந்த ஒப்பந்தம் போதுமானதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் ஈரானின் நடவடிக்கையை கண்டித்துள்ளன. அமெரிக்காவின் குற்றஞ்சாட்டிற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்தம் ஐ.நாவின் உத்தரவின் பெயரிலேயே நடந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் உள்ளார்ந்த நேர்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானுக்கெதிராக ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது அநியாயம் என்று துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தவுதோக்லு தெரிவித்தார். பிரேசிலும், துருக்கியும் இணைந்து ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் தீர்வை கண்டதற்கு சீனாவும், வெனிசுலாவும் வரவேற்றுள்ளன.
ஈரானின் நடவடிக்கை ராஜதந்திர முறையில் நடக்கவேண்டுமென்ற தங்களுடைய கருத்தின் வெற்றி இது என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மா ஸஓக்ஸு தெரிவித்தார்.
ஈரான் விவகாரத்தில் ஏற்பட்ட மூன்று நாடுகள் பரிகாரம் ஏகாதிபத்தியத்திற்கு விழுந்த பலத்த அடி என வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் தெரிவித்தார். ஈரானின் புரட்சி நடவடிக்கைகளுக்கு வெனிசுலா ஆதரவு அளிக்கும் என்று அவர் விளக்கினார்.
3.5 சதவீதம் செறியூட்டப்பட்ட 1200 கிலோ கிராம் யுரேனியத்தை துருக்கியிடம் வழங்கிவிட்டு 20 சதவீதம் செறியூட்டப்பட்ட 120 கிலோ யுரேனியம் வாங்கும் ஒப்பந்தத்தில் நேற்று முன்தினம் ஈரான் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈரானின் அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள இயலாது- அமெரிக்கா"
கருத்துரையிடுக