தாய்லாந்து பாராளுமன்றத்தைக் கலைக்க கோரியும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'சிவப்புச் சட்டை'க் குழுவினர் இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 16 பேர் கொல்லப்பட்டதுடன் 157பேர் காயமடைந்துள்ளனர்.
தமது கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மார்ச் மாதம் முதல் ஏராளமானோர் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் அரசுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மோதல் காரணமாக மார்ச் மாதம் முதல் இதுவரை 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: on "தாய்லாந்து ஆர்ப்பாட்டத்தில் நேற்று 16 பேர் பலி; 157 பேர் காயம்"
கருத்துரையிடுக