17 மே, 2010

சீனா நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 21 பேர் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் அன்ஷுன் பகுதியிலுள்ள யூவான்யாங் நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை இரவு வெடிவிபத்து ஏற்பட்டது. நச்சுத் தன்மையுள்ள கார்பன் மோனாக்ஸைடு வாயு வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிவிபத்து ஏற்பட்ட போது சுரங்கத்தில் 31 பேர் பணியில் இருந்தனர். அவர்களில் நச்சு வாயுவை சுவாசித்ததால் 21 பேர் உயிரிழந்தனர்.

எஞ்சியிருந்த 10 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் நச்சு வாயுவால் பாதிப்படைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அங்குள்ள ஹின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா தனது எரிசக்தி தேவைகளுக்கு நிலக்கரியையே முதன்மையாகச் சார்ந்துள்ளது. எனவே அங்கு நிலக்கரி சுரங்கங்களும் அதிகம். இருப்பினும் அச்சுரங்களில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று பரவலாகக் குற்றச்சாட்டு நிலவிவருகிறது.

இதை மெய்ப்பிக்கும் வண்ணம் கடந்த ஆண்டில் மட்டும், சீனாவில் சுரங்க விபத்துகளில் சிக்கி 2,600 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சீனா நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 21 பேர் பலி"

கருத்துரையிடுக