புதுடெல்லி:டெல்லி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசலில் சிக்கி பெண்ணும், சிறுவனும் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். எப்போதுமே கூட்டம் அதிகம் காணப்படும் டெல்லி ரயில் நிலையத்தில், கோடை விடுமுறை காலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் சற்று அதிகம் காணப்பட்டது.
பிற்பகல் 2.45 மணியளவில், டெல்லியில் இருந்து முஸாபர்பூர் செல்லும் சம்பூரண கிராந்தி எக்ஸ்பிரஸ், டெல்லியில் இருந்து பகல்பூர் செல்லும் விக்ரமசீலா எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் பிளாட்பாரம்கள் மாறுவதாக அறிவிப்பு வெளியானது.
அந்த ரயில்கள் கிளம்ப சில நிமிடங்களே இருந்ததால், பயணிகள் அனைவரும் தங்கள் பொருட்களுடன் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் 12 மற்றும் 13-வது பிளாட்பார்ம்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் பலர் கீழே விழுந்து மிதிபட்டனர், நெரிசலால் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதில் பகல்பூரைச் சேர்ந்த சோனி(35) என்ற பெண்ணும், ஒரு சிறுவனும் உயிரிழந்தனர். மேலும் மூன்று பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
ரயில்வே துறையின் அலட்சியமான போக்கால்தான் 2 பேர் உயிரிழந்ததாக பயணிகள் பலர் குற்றம்சாட்டினர்.
இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் அஸ்வின் லுகானி கூறியது:
'13-வது பிளாட்பார்மில் வரவேண்டிய சம்பூரண கிராந்தி எக்ஸ்பிரஸ் 12-வது பிளாட்பார்மிலும், 12-வதில் வரவேண்டிய விக்ரமசீலா எக்ஸ்பிரஸ் 13-வது பிளாட்பார்மிலும் மாறி வந்துவிட்டது.
இந்த இரு ரயில்களுமே சுமார் 2.45 மணியளவில் கிளம்ப வேண்டும் என்பதால் கடைசி நேரத்தில் பிளாட்பார்ம் மாற்ற அறிவிப்பை வெளியிட வேண்டியதாயிற்று என்றார் அவர்.
'பிளாட்பார்ம் மாற்ற அறிவிப்பு வந்து உடன் பயணிகளில் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு அடுத்த பிளாட்பார்முக்கு மாற முயன்றனர். பலர் பெரிய சூட்கேஸ்கள், பேக்குகளை வைத்திருந்ததால் அது மற்றவர்கள் மீது இடித்து கீழே தள்ளியது. பயணிகள் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அதில் இருந்து ஒருவர் கீழே விழுந்துவிட்டார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என்று மற்றொரு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
கடும் நடவடிக்கை
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த 3 நபர்குழு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் உள்ள 8 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசாக காயமடைந்தவர்களுக்கு ரூ. 15 ஆயிரமும் ரயில்வே துறையால் வழங்கப்படும் என்றும் மம்தா அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்: on "புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி"
கருத்துரையிடுக