மேற்குகரை:இஸ்ரேலின் அக்கிரமமான அராஜகத் தடையால் பட்டினியால் வாடும் காஸ்ஸா மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுடன் புறப்பட்ட 'ப்ளோடில்லா' சமாதான கப்பல்கள் மீது இஸ்ரேல் ராணுவம் கொடூரமான முறையில் நடத்திய தாக்குதலில் 16 சமாதான பணியாளர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
60க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. கப்பல்களின் அணிவரிசையில் முதலாவதாக நின்றுக் கொண்டிருந்த மாவி மர்மரா என்ற கப்பலின் மீதுதான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கப்பலை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த இஸ்ரேலிய ராணுவம் இஸ்ரேலிய நகரான ஃஹைபாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
பல்வேறு நாடுகளிலிருந்து 800 சமாதான பணியாளர்கள் அக்கப்பல்களில் உள்ளனர். தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட கப்பலில் 100 சமாதான பணியாளர்கள் இருந்தனர்.
தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் வெளிவரவில்லை. கப்பலிலிருந்த அல்ஜசீராவின் செய்தியாளர் தனது கேமராவின் மூலம் பதிவுச் செய்த காட்சிகள் மூலம்தான் நிவாரண கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் செய்தி வெளிவந்தது.
கப்பலின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கப்பல் அணிவகுப்பை தடுப்போம் என ஏற்கனவே அறிவித்த இஸ்ரேல் போர் கப்பல்களை தயார் நிலையில் வைத்திருந்தது.
சர்வதேச கடல் எல்லைக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கவே இஸ்ரேல் ராணுவம் கப்பல் கேப்டனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து கப்பலை சுற்றி வளைத்த இஸ்ரேலிய ராணுவத்தினர் கப்பல் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதற்கிடையே ஹெலிகாப்டர் மூலம் கூடுதல் ராணுவத்தினர் கப்பலுக்குள் நுழைந்தனர்.
செய்தி:மாத்யமம்
0 கருத்துகள்: on "காஸ்ஸா நிவாரண கப்பல்களின் மீது இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்-16 பேர் பலி"
கருத்துரையிடுக