31 மே, 2010

ஜாஹிர் நாயக்கின் சுற்றுப் பயணம்:பிரிட்டனில் சர்ச்சை

லண்டன்:மும்பையைச் சார்ந்த பிரபல முஸ்லிம் அறிஞரும் மதங்களுக்கிடையேயான கலந்துரையாடலில் வல்லுநராக விளங்கும் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்கு வருகைத்தர அந்நாட்டு அரசு விசா அனுமதியளித்ததற்கு அந்நாட்டின் பத்திரிகைகளும்,சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கியுள்ளன.

ஜாஹிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், வெறுப்பைத் தூண்டும் உரையை நிகழ்த்துபவர் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன பத்திரிகைகளும்,சில அமைப்புகளும்.

லண்டனில் வெம்ப்ளி அரினா, ஷெஃபீல்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இம்முறை டாக்டர் ஜாஹிர் நாயக் உரை நிகழ்த்தவிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்கு சென்றபொழுது கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி டேவிட் டோஸ் உள்ளிட்டோர் அவருக்கெதிராக பிரச்சாரம் செய்தனர்.

கன்சர்வேடிவ்கள் நாட்டை ஆளும்பொழுது ஜாஹிர் நாயக்கிற்கு விசா அனுமதித்தது அநியாயம் என டெலிகிராஃப் பத்திரிகை கூறுகிறது.

இதுக்குறித்து உள்துறைச்செயலாளர் தெரசாமே கூறுகையில்,"ஜாஹிர் நாயக் மீது எவ்வித தீவிரவாத வழக்கும் பதிவுச் செய்யப்படவில்லை. அதுவரை அவருக்கு பிரிட்டன் விசா வழங்கும்" என தெரிவித்தார்.
செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜாஹிர் நாயக்கின் சுற்றுப் பயணம்:பிரிட்டனில் சர்ச்சை"

கருத்துரையிடுக