நக்ஸல்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 2 பேர் உள்பட 4 நபர்களை உத்தரப் பிரதேச மாநில போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் விக்ரம் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
சிஆர்பிஎஃப் பயிற்சி முகாம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயுதங்கள், துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்டவற்றை சிஆர்பிஎஃப் வீரர்கள் திருடுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராம்பூர், மொராதாபாத், ஜான்ஸி உள்ளிட்ட பகுதிகளில் மாநிலத்தைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப் படையினர் (எஸ்டிஎஃப்) தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன் பலனாக சிஆர்பிஎஃப் வீரர்கள் வினோத் பாஸ்வான், தினேஷ் சிங், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் யசோதானந்த் சிங் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தோம். அவர்களிடமிருந்து 5 ஆயிரம் துப்பாக்கிக் குண்டுகள், இன்சாஸ் துப்பாக்கிக்குரிய குண்டுகளை வைக்கும் மேகஸின்கள், .25 ரக போர் துப்பாக்கிகள், ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

0 கருத்துகள்: on "நக்ஸல்களுக்கு ஆயுதங்கள் சப்ளை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்பட 4 பேர் கைது"
கருத்துரையிடுக