1 மே, 2010

கந்தமால் கலவர வழக்கு: 3 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல்

ஒரிசா மாநிலம் கந்தமாலில் நடந்த கலவர வழக்கில் 3 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

2008-ம் ஆண்டில் புல்பானி மாவட்டம் கந்தமால் அருகே ரெய்கேலா கிராமத்தில் நடந்த கலவரத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களின் குடிசைகளுக்குத் தீவைக்கப்பட்டது.

இதையடுத்து இந்தக் கலவரம் தொடர்பாக ஒருவரை போலீஸôர் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். கந்தமால் கலவரங்கள் தொடர்பாக 2 விரைவு நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது.

சிறுபான்மை மக்களின் குடிசைகளுக்குத் தீவைத்த ஈஸ்வர் தோண்டியா என்பவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கூடுதல் செஷன்ஸ் நீதிபதி எஸ்.கே. தாஸ் தீர்ப்பளித்தார். மேலும் அபராதமாக ரூ.2 ஆயிரம் விதிக்கப்பட்டது.

மற்றொரு விரைவு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் காம்தேவ் பிரதான், பாலாஜி பிரதான் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மிதாபாலி கிராமத்தில் வீடுகளுக்கு தீவைத்த குற்றத்திற்காக இருவருக்கும் இந்த தண்டனையை நீதிபதி வழங்கினார். இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 5 பேரை நீதிமன்றம் விடுவித்தது.

கந்தமால் கலவர வழக்கு தொடர்பாக இதுவரை 105 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 445 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கந்தமால் கலவர வழக்கு: 3 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல்"

கருத்துரையிடுக