20 மே, 2010

2010 ஆண்டின் மேற்கு வங்காள மதரஸாவிற்கான உயர்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

மேற்கு வங்காளத்தின் மதரஸாவிற்கான தேர்வு ஆணையம் 2010ம் ஆண்டின் மதரஸாவிற்கான உயர்கல்வி தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

தேர்வு ஆணையத் தலைவர் டாக்டர்.ஷொஹ்ராப்தீன் ஷேக் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 500க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் மேற்கு வங்காள மதரஸா ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டு 42,200 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த ஆண்டின் தேர்வு சதவிகிதம் 75.9% ஆகும்.

முர்ஸிதாபாத்தின் சாம்சர்கஞ்ச் மாணவர் மெஹ்பூப் ஆலம் 800க்கு 787 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். முஹம்மது நஸருத்தீன், அப்துல் அப்சக் ஆகியோர் முறையே 782, 768 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "2010 ஆண்டின் மேற்கு வங்காள மதரஸாவிற்கான உயர்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு"

கருத்துரையிடுக