One visual is better than thousands words ஆயிரம் வார்த்தைகளை விட ஒரு காட்சி சிறந்தது என்ற ஒரு சொல் உண்டு.
அதனை நிரூபித்து இருக்கிறது இந்த குறும்படம். 85 வருட ஹிந்துத்துவா பாசிசத்தின் சேவையை 13 நிமிடங்களில் தோலுரித்துக் காட்டுகிறது.
சேவகர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்துபவர்களின் உண்மையான சேவை(சேதம்) என்ன என்பதை தெளிவுப்படுத்துகிறது இந்தப் படம். தலைப்பிலேயே முழுபடத்தின் கருவும் ஒளிந்திருக்கிறது, இயக்குநர் பிரின்ஸ் என்னாரெசு பெரியாருக்கு சபாஷ்.
திற! எதனைத் திறக்க? மருத்துவமனையில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு கிடத்தப்பட்டிருக்கும் பெண்ணை பரிசோதிக்க வரும் மருத்துவர் கேட்கிறார் பெண்ணின் தந்தையிடம் நீங்கள் யார்? என. நான் இந்தப்பெண்ணின் தந்தை என கூறுகிறார் அந்தப் பெரியவர்.
சரி ஜன்னலை திற! இப்பெண்ணிற்கு சுத்தமான காற்று தேவைப்படுகிறது என்கிறார்.( who are you? I am the father of this girl, Ok Open it, she need the fresh air) மருத்துவர் சொன்னது காதில் விழாமல் அப்படியே மகளைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் தந்தையைப் பார்த்துக் கோபமாகவும் சத்தமாகவும் open it(திற) என்று மீண்டும் சொல்கிறார்.
open it(திற!) என்ற வார்த்தையை கேட்ட அடுத்த நொடி அந்தப் பெண்ணிடம் ஒரு அசைவு தெரிகிறது. சுயநினைவில்லாமல் கிடக்கும் நிலையிலும், அவளது கைகள் மட்டும் தன்னிச்சையாக சுடிதாரின் மேல்சட்டையை மேலே சுருட்டி, கால் சட்டையின் நாடாவை அவிழ்க்கத் தொடங்குகின்றது.
அவளை வேனில் ஏற்றிச் சென்ற சேவகர்கள் என்ற கயவர்கள் அடித்து உதைத்து open it, open it (திற,திற) எனக்கூறி வன்புணர்வு செய்த காட்சிகள் ஆழ்மனதில் நிழலாடுகின்றது. கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அந்தக் கோரத்தை ஒளிப்பதிவாளர் சிவப்புத்திரையைக் காட்டி மறைக்கிறார்.
அருமையான காட்சி அமைப்புக்காக ஒளிப்பதிவாளருக்கு சபாஷ்(பெயர்).
குஜராத் இனப்படுகொலையின் கோரத்தை சித்தரிக்கும் ஒரு சிறுபகுதிதான் இக்குறும்படம். நிவாரண முகாம்களில் காணும் முகங்களை எதார்த்தமாக காட்ட முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அந்த முகங்களை காணும்பொழுது அவர்கள் பட்ட காயங்களை பார்க்கும் பொழுது நமது உள்ளமும் காயமுறுகிறது.
நிழலே இவ்வளவு கோரமாக இருந்தால் நிஜம் எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது.
முஸ்லிம்கள் பாடம் பெறவேண்டிய காட்சி அமைப்பு ஒன்றும் இதில் உண்டு. எதிரிகள் முஸ்லிம்களை அடையாளம் காண்பது பிறப்புறுப்புகளை வைத்தே தவிர பிரிவுகளை வைத்தல்ல என்பதேயாகும்.
எதிரிகள் முஸ்லிம்களை அழித்தொழிக்க மொழி, ஜாதி, இனம் தாண்டி ஒன்றிணைந்து செயல்படும் பொழுது முஸ்லிம் சமூகம் தன்னை பாதுகாக்க ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும்.
இந்தக்கருத்தைதான் நீதிபதி லிபர்ஹான் தனது அறிக்கையில் பாசிஸ்டுகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய தவறிவிட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
நீதிபதி சச்சார் தனது அறிக்கையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறுகிறார்.
இதற்கு தீர்வு சேவகர்களுக்கு திருமணம் செய்துவைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிறார் ஒரு மார்க்க உலமா.
அச்சு ஊடகத்தில் கால்பதிக்கவே தடுமாறும் இந்த முஸ்லிம் சமுதாயம் காட்சி ஊடகத்தில் என்று கால்பதிக்க போகிறது? என்ற ஏக்கம் இக்குறும்படத்தை காணும்பொழுது நம் மனதில் எழுகிறது.
திற குறும்படத்தை பார்த்த பிறகாவது முஸ்லிம்களின் உள்ளக்கதவு திறக்குமா?

0 கருத்துகள்: on "Open it ! (திற!)"
கருத்துரையிடுக