புதுடெல்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில் மாவோயிஸ்டுகள் சி.ஆர்.பி.எஃப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் 75 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதலுக்கு பின்னர் மனோரீதியாக பீதி வயப்பட்ட சி.ஆ.பி.எஃப் படைவீரர்கள் ரோந்துச் செல்லாமலேயே சென்றதாக கூறி ஆவணங்களை தயாரித்துள்ளனர்.
சி.ஆர்.பி.எஃப் படையினர் கூட்டுப் படுகொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு நபர் விசாரணை அமைக்கப்பட்டது. பி.எஸ்.எஃப்பின் முன்னாள் டைரக்டர் இயக்குநரான இ.என்.ராம் மோகன் ஒரு நபர் விசாரணைக் கமிட்டியில் நியமிக்கப்பட்டார். இவர் தனது அறிக்கையை உள்துறைச் செயலாளருக்கு அளித்துள்ளார். இவ்வறிக்கையில்தான் சி.ஆர்.பி.எஃப் குறித்த அதிர்ச்சி தரும் செய்தியை தெரிவித்துள்ளார் அவர்.
தாக்குதல் நடவடிக்கைக்கு தயாரகும் பொழுது பேணவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீறப்பட்டன.
சி.ஆர்.பி.எஃப் ஆபீஸரிடமிருந்து தொலைந்து போன வயர்லஸ் செட் மாவோவாதிகளிடம் சிக்கி அவர்கள் துணை ராணுவப்படையினரின் அசைவுகளை அறிந்துவிடுவார்கள் என அஞ்சுகிறேன் என ராம் மோகன் தெரிவிக்கிறார்.
பாதுகாப்புப் படைகளை ஒருங்கிணைந்து உருவாக்குவதற்கான திட்டத்தையும் சி.ஆர்.பி.எஃப் புறக்கணித்தது. ஏப்ரல் 6ஆம் தேதி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திய தண்டேவாடா மாவட்டத்தில் ஏழு கிலோமீட்டர் சுற்றளவுள்ள பிரதேசத்தின் கட்டுப்பாட்டை தம் வசம் கொண்டுவர சி.ஆர்.பி.எஃப்பை அனுப்புவதற்கு சி.ஆர்.பி.எஃப் ஆபரேசன் டி.ஐ.ஜி, தண்டேவாடா எஸ்.பி, பஸ்டர் பகுதியின் ஐ.ஜி ஆகியோர் ஒன்றிணைந்து தீர்மானம் எடுத்திருந்தனர்.
துணை ராணுவம் ஏப்ரல் 4ஆம் தேதி மாலை நேரத்தில் புறப்பட்டு ஏப்ரல் 6ஆம் தேதி திரும்பவந்து சிண்டால்கர் முகாமில் ரிப்போர்ட் செய்ய வேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய தினம் மாலை 7 மணிக்கு துணை கமாண்டரின் தலைமையில் புறப்பட்ட படைப்பிரிவு காட்டில் நுழையவில்லை. முகாமிலிருந்து சற்று தூரத்தில் தங்கிவிட்டது. காட்டில் பிரவேசிக்க துணை ராணுவப்படை அச்சப்படுகிறது என்பதன் தெளிவான ஆதாரமாகும் இது.
காட்டில் பிரவேசித்ததாக துணை கமாண்டர் கமாண்டரிடமும், டி.ஐ.ஜியிடமும் பொய் கூறியதுடன் பதிவேட்டில் போலியாக எழுதியுள்ளார்.
சிண்டால்கர் முகாமில் இரவு நேரத்தை செலவிட்ட துணை ராணுவப் படையினர் மறுநாள் ராணுவ நடவடிக்கையின் தந்திரங்களை புறக்கணித்து முகாமிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலிலுள்ள முக்ராம் கிராமத்திற்கு சென்று, உணவை சமைப்பதற்காக பாத்திரங்களும், இறைச்சிக்காக ஆட்டையும் கிராமவாசிகளிடம் கேட்டுள்ளனர்.
ரகசியங்கள் வெளியே கசியாமலிருக்க கிராமத்தினரோடு தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதும், ஒரே இடத்தில் அதிக நேரம் முகாமிடக் கூடாது என்பதும் போர் தந்திரமாகும்.
பின்னர் இங்கிருந்து வேறொரு கிராமத்திற்கு சென்ற ராணுவத்தினர் நேரத்தை செலவிட்டுவிட்டு குறித்த நேரத்தில் திரும்பி வந்துள்ளனர். வேறொரு இடத்தில் சி.ஆர்.பி.எஃப் ஆபீசரிடமிருந்து வயர்லெஸ் தொலைந்து போனதால் முழுவதுமாக தேடாமல் திரும்பிய படைப் பிரிவினர் இதனை மேலதிகாரியிடம் ரிப்போர்ட் செய்யவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மாவோயிஸ்டுகளுக்கு பயந்து ரோந்துச் சென்றதாக போலி ஆவணங்களை தயாரித்த சி.ஆர்.பி.எஃப்"
கருத்துரையிடுக