20 மே, 2010

ரிலையன்ஸ், மோர் நிறுவன கடைகளில் காலாவதி உணவுப் பொருள் விற்பனை அம்பலம்

சென்னையில் காலாவதி உணவுப் பொருட்களை விற்றது தொடர்பாக கைதாகியுள்ள துரைப்பாண்டி, ரிலையன்ஸ், மோர் ஆகிய மிகப் பெரிய நிறுவனங்களின் கடைகளிலிருந்து உணவுப் பொருட்களை வாங்கி விற்றதாக கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் சென்னை ராயுபரத்தில் வசித்து வருகிறார். அங்கு குடோன்களை வைத்து பாக்கெட்களில் விற்பனையாகும் உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

சமீபத்தில் துரைப்பாண்டியன் குடோன் ஒன்றில் நடந்த விசாரணையில் காலாவதி உணவுப் பொருட்கள் பெருமளவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து துரைப்பாண்டி தலைமறைவானார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் அவர் சரணடைந்தார்.

அவரை தற்போது போலீஸார் காவலில் எடுத்து வைத்து 3 நாட்களாக விசாரித்து வருகின்றனர்.

3வது நாளாக நடந்த விசாரணையில், பல்வேறு பரபரப்பான தகவல்களைக் கொடுத்துள்ளார் துரைப்பாண்டி.

சென்னையில் பிரபலமாக உள்ள ரிலையன்ஸ் மற்றும் மோர் நிறுவன கடைகளிலிருந்துதான் தான் காலாவதியான உணவுப் பொருட்களை வாங்கி விற்று வந்ததாக கூறியுள்ளார் துரைப்பாண்டி. கடந்த ஒரு வருடமாக இவ்வாறு செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரிலையன்ஸ் மற்றும் மோர் நிறுவன கடைகளில் ரெய்டு நடத்தவும், அவற்றின் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவும் ராயபுரம் போலீஸார் தீர்மானித்துள்ளனர். மேலும் இவர்களின் வங்கிக் கணக்குளை பரிசோதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரிலையன்ஸ், மோர் நிறுவன கடைகளில் காலாவதி உணவுப் பொருள் விற்பனை அம்பலம்"

கருத்துரையிடுக