இவர்கள் ஈரானை உளவறியவந்ததாக கருதப்படுகிறது. சிறையிலடைக்கப்பட்ட இவர்களை ஈரான் இஸ்லாத்தின் வழிகாட்டுதலின் படி மனிதநேயத்துடனே நடத்தி வந்தது.
இந்நிலையில் 3 அமெரிக்கர்களின் அன்னையர் அவர்களை சந்திப்பதற்கு ஈரான் வர விசா அனுமதி வழங்கப்பட்டது.

இவர்கள் தங்கள் பிள்ளைகளை ஈரானின் எஸ்திக்லால் ஹோட்டலில் வைத்து வியாழக்கிழமை சந்தித்தனர்.
நோரா ஸோர்டு, லாரா ஃபட்டல், க்ளிண்டி ஹிக்கி ஆகியோர்தான் அந்த அன்னையர். இஸ்லாமிய சட்டத்தின்படி அமெரிக்கர்களின் அன்னையருக்கு இரக்க உணர்வின் அடிப்படையில் விசா வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
3 அமெரிக்கர்கள் மீது கடுமையான குற்றம் சுமத்தப்பட்டிருந்த பொழுதும் அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதாகவும், ஆனால் அமெரிக்காவின் வசம் உள்ள ஈரானிய கைதிகள் கடுமையான முறையில் நடத்தப்படுவதாகவும் ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அபூகரைப், பக்ராம், குவாண்டனாமோ என ஏராளமான சிறைக்கூடங்களில் முஸ்லிம்களை அநியாயமாக கைது செய்து தீவிரவாத முத்திரைக்குத்தி சிறையிலடைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் பொழுது இஸ்லாத்தின் வழியில் நின்று மனிதாபிமானத்துடன் அமெரிக்க கைதிகளிடம் நடந்துக் கொள்ளும் ஈரான் பாராட்டிற்குரியது.
ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு ஈரான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த பிரிட்டீஷ் கடற்படையினரை எவ்வித பிரதிபலனின்றி மன்னித்து விடுதலைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி:Press tv
0 கருத்துகள்: on "ஈரான் கடைப்பிடித்த இஸ்லாத்தின் மனிதநேயம்: அமெரிக்க கைதிகளை சந்திக்க அன்னையருக்கு அனுமதி"
கருத்துரையிடுக