வாஷிங்டன்:வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவுடன் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்திற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது அமெரிக்கா.
10 போயிங் சி.17 குளோப் மாஸ்டர் 3 விமானங்களின் விற்பனை தொடர்பாக இந்தியாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை துவங்கும் என எதிர்பார்ப்பதாக புதுடெல்லியில் அமெரிக்க தூதரகத்தின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
பென்டகனின் பாதுகாப்பு துணை ஏஜன்சி இவ்விஷயத்தை அமெரிக்க காங்கிரஸிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி பாதுகாப்புத் தொடர்பான உடன்பாடுகளுக்கு நிர்பந்தமாக செய்ய வேண்டிய நடவடிக்கையாகும் இது.
source:மாத்யமம்
0 கருத்துகள்: on "இந்தியாவுடன் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்திற்கு தயாராகிறது அமெரிக்கா"
கருத்துரையிடுக