8 மே, 2010

கடந்த மூன்று ஆண்டுகளில் 3450 விவசாயிகள் தற்கொலைச் செய்துள்ளனர்

புதுடெல்லி:2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை 3450 பேர் இந்தியாவில் தற்கொலைச் செய்துள்ளனர்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் இதில் முதலிடம் வகிக்கிறது. இங்கு 1720 விவசாயிகள் தற்கொலைச் செய்துள்ளனர். மத்திய உணவு-விவசாயத்துறை அமைச்சரான சரத்பவாரின் சொந்த மாநிலம் மஹாராஷ்ட்ரா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாம் இடத்தில் ஆந்திரபிரதேசம் உள்ளது. இங்கு 1142 விவசாயிகள் தற்கொலைச் செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் 434 விவசாயிகள் தற்கொலைச் செய்துள்ளனர்.சரத் பவார் தான் இதனை மாநிலங்களவையில் அறிவித்தார்.

இந்த ஆண்டும் விவசாயிகள் தற்கொலைச் செய்த செய்திகள் வந்துள்ளன. மஹாராஷ்ட்ரா மாநிலம் விதர்பாவில் 6 விவசாயிகள் தற்கொலைச் செய்துக் கொண்டனர்.

2008 ஆம் ஆண்டை தவிர்த்தால் 2009 ஆம் ஆண்டு தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளதாக பவார் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு 1237 விவசாயிகள் தற்கொலைச் செய்தபொழுது 2009 ஆம் ஆண்டில் தற்கொலைச் செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 840 ஆக குறைந்துள்ளது.

விவசாயக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைத்ததோடு மஹாராஷ்ட்ரா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 16978 கோடி ரூபாய் நிதியுதவி அனுமதித்துள்ளதாக பவார் தெரிவித்தார்.

விதர்பாவுக்காக மஹாரஷ்ட்ரா அரசு சிறப்பு பேக்கேஜ் செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கடந்த மூன்று ஆண்டுகளில் 3450 விவசாயிகள் தற்கொலைச் செய்துள்ளனர்"

கருத்துரையிடுக