8 மே, 2010

ராணுவ மேஜரின் கம்ப்யூட்டரிலிருந்து முக்கிய தகவல்கள் உளவறியப்பட்டது உறுதியானது: மத்திய அரசு

புதுடெல்லி:இந்திய ராணுவம் தொடர்பான முக்கிய தகவல் அந்தமானிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் நேற்று வெளியாகியிருந்தது. ஆனால் இதனை ராணுவம் மறுத்திருந்தது.

ஏற்கனவே இஸ்லாமாபாத்தில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரி மாதுரி குப்தா இந்தியாவுக்கெதிராக உளவு வேலைப் பார்த்ததாக கைதுச் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தான் இந்திய ராணுவ மேஜரின் உளவு வேலைத் தொடர்பான தகவலும் வெளியாகி பிரச்சனையை கிளப்பியுள்ளது.

இத்தகையதொரு சூழலில் ராணுவமும், இதர ஏஜன்சிகளும் நடத்திய விசாரணையில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பணியாற்றும் ஒரு ராணுவ மேஜரின் கம்ப்யூட்டரிலிருந்து முக்கிய விபரங்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பட்டது உறுதிச் செய்யப்பட்டுள்ளது என மத்திய் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

ஆனால் மேஜர் உளவு வேலைப்பார்த்தாரா என்பதற்கான ஆதாரம் ஒன்றும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தார். இதுத் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சண்டிகரில் ஒரு ராணுவ அதிகாரியின் முறைகேடான உறவைக் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது அதுக்குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யப் பெண்மணியுடனான முறைகேடான பாலியல் உறவு வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட கடற்படை கமாண்டர் சுக்ஜிந்தர் சிங்கின் பங்கைக் குறித்து விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்ய பெண்மணியுடன் ரஷ்ய ராணுவ முகாமில் வைத்து சுக்ஜிந்தர் சிங் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் காட்சிகள் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

விமானப்படையைச் சார்ந்த அட்மிரல் கோர்ஷ்கோவின் முறைகேடுகளை கண்காணிக்க ரஷ்யாவுக்கு நியமிக்கப்பட்ட 25 உறுப்பினர் குழுவின் தலைவராகயிருந்தவர் சுக்ஜிந்தர் சிங்.

2004 ஆம் ஆண்டு 9740 லட்சம் டாலருக்கு செய்யப்பட்ட ஒப்பந்தம் பின்னர் 2.33 பில்லியனுக்கு உயர்த்தப்பட்டது. இதற்குப் பின்னணியில் முறைகேடான நடவடிக்கைகளிருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ராணுவ மேஜரின் கம்ப்யூட்டரிலிருந்து முக்கிய தகவல்கள் உளவறியப்பட்டது உறுதியானது: மத்திய அரசு"

கருத்துரையிடுக