8 மே, 2010

மெரிட் லிஸ்டில் இடம் பிடித்தவர்களும் இடஒதுக்கீட்டில் வேலைக்கு தகுதியானவர்களே: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி:மெரிட் லிஸ்டில்(தகுதிப் பட்டியல்) இடம் பிடித்தாலும் இடஒதுக்கீடு பிரிவில் உட்பட்ட வேலைவாய்ப்பைப் பெற தகுதியுடையவர்களுக்கு விருப்பமான வேலையை தேர்ந்தெடுப்பதற்கு இடஒதுக்கீடு சலுகையை பயன்படுத்தலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

யு.பி.எஸ்.சி (Union Public Service Commission) என்றழைக்கப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மெரிட் லிஸ்டில் இடம் பெற்றப் பிறகு இடஒதுக்கீடு சலுகையை பெறுவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என சுப்ரீம் கோர்ட் கூறியது.

யு.பி.எஸ்.சி சட்டத்தின் படி இடஒதுக்கீடு பிரிவில் உள்ளவர்கள் மெரிட் லிஸ்டில் இடம் பிடித்தாலும் இடஒதுக்கீடு சலுகையை பெற தகுதியானவர்களே. இதன் அரசியல் சட்ட தகுதியைக் குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து உறுப்பினர் பெஞ்ச் ஆய்வுச் செய்தது.

மெரிட் லிஸ்டில் இடம் பிடித்தவர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகையை பயன்படுத்துவதற்கு அனுமதியளித்து சிவில் சர்வீஸ் தேர்வுச் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தம் செல்லுபடியாகும் என சுப்ரீம் கோர்ட் உறுதிச் செய்தது.

சட்டதிருத்தத்தை செல்லாது எனக்கூறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக மத்திய அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவில்தான் சுப்ரீம் கோர்ட் இத்தீர்ப்பை கூறியுள்ளது.

மெரிட் லிஸ்டில் இடம் பெற்றிருந்தாலும், இடஒதுக்கீடு சலுகையை பயன்படுத்துவது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது என மத்திய அரசின் வாதம். இது பிற்பட்ட சமூகங்களின் வாழ்க்கை உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசு சுட்டிக் காட்டியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மெரிட் லிஸ்டில் இடம் பிடித்தவர்களும் இடஒதுக்கீட்டில் வேலைக்கு தகுதியானவர்களே: சுப்ரீம் கோர்ட்"

கருத்துரையிடுக