19 மே, 2010

ஆப்கானிஸ்தானில் விமான விபத்து- 43 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் 43 பயணிகளுடன் சென்ற விமானம் மலைப் பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.

தலைநகர் காபூலில் இருந்து வடக்கு ஆப்கானி்ஸ்தானில் உள்ள குண்டுஸ் நகருக்கு பமீர் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் இன்று காலை சென்று கொண்டிருந்தது.

சலாங் மலைப் பகுதியில் சென்றபோது அந்த விமானம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.

அந்த விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிவிட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவி்த்துள்ளது.

அதிலிருந்த 38 பயணிகள், 2 விமானிகள் உள்ளிட்ட விமான சிப்பந்திகள் பலியாகியிருக்கலாம் என்று தெரிகிறது. பயணிகளில் பலர் வெளிநாட்டினர் என்று கூறப்படுகிறது.

இந்த விமானத்தி்ன் சிதறிய பாகங்களை கண்டுபிடிக்கவும் உடல்களை மீட்கவும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் உதவியை ஆப்கானி்ஸ்தான் அரசு கோரியுள்ளது.இதையடுத்து நேட்டோ ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
source:Thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கானிஸ்தானில் விமான விபத்து- 43 பேர் பலி"

கருத்துரையிடுக