காந்திநகர்:ஷொராஹ்ப்தீன் போலி எண்கவுன்டர் விவகாரத்தில், திடீர் திருப்பமாக ஒய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் 6 மூத்த போலீஸ் அதிகாரிகளை விசாரணைக்காக ஆஜராகுமாறு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் டி.ஜி.பி க்கள் மாத்தூர் மற்றும் ஜி.சி.ராய்கர், கிரிமினல் துறை ஏ.டி.ஜி. வி.வி.ராபரி, ராஜ்காட் போலீஸ் கமிஷ்னர் கீதா ஜோஹ்ரி, போலீஸ் டிரைவிங் ஸ்கூல் தலைவர் ராஜ்னிஷ் ராய் (துணை இன்ஸ்பெக்டர்) மற்றும் ஏ.டி.எஸ் எஸ்.ஐ ஜி.எல்.சிங்கால் ஆகிய 6 மூத்த அதிகாரிகளுக்கு அச்சம்மன் அனுப்பப்பட்டது. மே3 முதல் மே7 ஆகிய நாட்களுக்குள் சி.பி.ஐ முன்னால் ஆஜராகுமாறு அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில், கீதா ஜோஹ்ரி மற்றும் ராய் ஆகிய அதிகாரிகளை, சி.பி.ஐ உத்தியோக பூர்வமற்ற முறையில் ஏற்கனவே விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சி.ஐ.டி துறையின் தலைவராக மாத்தூர் இருந்தபோது,டி.ஜி வன்ஜாரா, எஸ்.பி ராஜ்குமார் பாண்டியன் மற்றும் எம்.என் தினேஷ் ஆகிய மூன்று மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் போலீஸ் அதிகாரி ராயின் முயற்ச்சியினால் கைது செய்யப்பட்டனர். இதற்பிறகு, மாத்தூர் பதவி உயர்வு அளிக்கப்படவே, போலிஸ் கமிஷ்னர் கீதா ஜோஹ்ரி இவ்வழக்கையேற்று நடத்தினார்.
கீதாவின் பொறுப்பற்ற விசாரணையால் கொதிப்படைந்த உச்ச நீதிமன்றம், கண்டனத்துடன் இவ்வழக்கை சி.பி.ஐக்கு மாற்றியது. இதனைத் தொடர்ந்து தான், கடந்த புதனன்று நான்காவது குற்றவாளியாக மற்றொரு ஐ.பி.எஸ் அதிகாரி, அபே சுதாசமா (அஹ்மதாபாத் துணை கமிஷ்னர்) கைது செய்யப்பட்டார்.
உயர்மட்ட வட்டராங்கள் தெரிவிக்கையில், ஷொராஹ்ப்தீனின் போலி எண்கவுன்டரை நிகழ்த்திய பிறகு, அதிகாரிகள் மத்தியில் நடந்த தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சி.டியை, ராய் சி.பி.ஐயிடம் ஒப்படைத்ததையடுத்து, இந்த நான்காவது அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த முக்கிய சி.டி பின்னர் சி.ஐ.டி கோப்புகளிலிருந்து காணாமல் சென்றுவிட்டது. அந்த சி.டியின் நகலை ராய் வைத்திருந்ததால், சி.பி.ஐக்கு மற்றொரு நகல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, சுதசமாவின் இரண்டு போலீஸ் டிரைவர்களை காணவில்லை. போலி எண்கவுன்டரின்போது, சுதாசமா சென்ற இடங்களின் பதிவேடு அவர்களிடம் தான் இருக்கிறது.
source:Twocircles
0 கருத்துகள்: on "ஷொராஹ்ப்தீன் போலி எண்கவுன்டர் வழக்கு - 6 மூத்த குஜராத் அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. சம்மன்"
கருத்துரையிடுக