
சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணம் செய்த டாட்டா 407 புல்லட் ப்ரூஃப் வாகனத்தை மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி மூலம் தகர்த்தனர். சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பைக்கில் பயணம் செய்த 2 சிவிலியன்களுக்கு தாக்குதலில் காயம் ஏற்பட்டது.
மாவட்ட தலைநகரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள பெடகோடபல் கிராமத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. இதனை துணை இயக்குநர் ஜெனரல் ராம் நிவாஸ் தெரிவித்தார்.
பஸகுடா அவப்பள்ளியிலிருந்து பிஜாபூருக்கு சி.ஆர்.பி.எஃபின் 168-ஆம் படை பிரிவு செல்லும் வழியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்திலிலுள்ள பகுதிகளுக்கு வாகனங்களில் செல்லாதீர்கள் என்ற எச்சரிக்கையை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீறியதாக சட்டீஷ்கர் மாநில உள்துறை அமைச்சர் நான்கிராம் கன்வர் தெரிவித்தார்.
சத்தீஷ்கரில் கடந்த மாதம் 6 ஆம் தேதி தந்தேவாடாவில் நடைபெற்ற மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைக் குறித்த விசாரணைகளும், தொடர் நடவடிக்கைகளும் நடந்துவரும் சூழலில் மேலும் ஒரு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடந்தது ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மாவோயிஸ்டுகளின் வலுவான பகுதியான பஸ்தாரில் தான் இரண்டு தாக்குதல்களுமே நடந்துள்ளன. இப்பிரதேசத்தில் கனிம வளங்களை குத்தகை நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக அப்பிரதேசத்தில் வாழும் மக்களை வெளியேற்ற திட்டமிடும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் கோபம் அதிகரித்துள்ள ஆதிவாசிகள் பகுதியில் அவர்களுடைய ஆதரவு மாவோயிஸ்டுகளுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சத்தீஷ்கர்:மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்- 7 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் படுகொலை"
கருத்துரையிடுக